உணவகங்களில் புகைப்பதற்குத் தடை: 5 நாளில் 2,312 குற்றப்பதிவறிக்கை

அனைத்து உணவு மையங்களிலும் புகைப்பதற்கான தடை முழுமையாக அமல்படுத் தப்பட்ட முதல் 5 நாளில், மொத்தம் 2,312 குற்றப் பதிவறிக்கைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தலைமை இயக்கு நர் டாக்டர் நூர் ஹஷாம் அப்துல்லா தகவல் அறிவித்துள்ளார்.
இக்கால கட்டத்தில் மொத்தம் 29,903 உணவகங்களைச் சுகாதாரத் துறை அதிகாரிகள் பார்வையிட்டுள்ளனர். அதில் 1,702 அறிக்கைகள் புகையிலை கட்டுப்பாட்டுச் சட்டம் 11(1)(டி)இன் கீழ் வெளியாக்கப்பட்டுள்ளன. 400 குற்றப்பதிவறிக்கைகள் புகைப்பதற்கு எதிரான எச்சரிக்கைப் பலகை வைக்கப்படாததற்கு உணவக உரிமையாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன.
வயது குறைந்தோர் புகைக் கும் குற்றம் சம்பந்தப்பட்ட 118 அறிக்கைகள் வெளியாக்கப் பட்டுள்ளன. இந்தக் காலகட்டத்தில் அமலாக்க நடவடிக்கையைத் தொடர்ந்து உணவகங்களில் புகைக்கும் குற்றங்கள் படிப்படியாக குறைந்துள்ளன. முதல் நாளில் 708ஆக இருந்த நிலையில், அடுத்தடுத்த நாட்களில் 393, 366 என்று குறைந்தன. ஆயினும் வார இறுதி நாளில் அது 404ஆகவும், 441 ஆகவும் உயர்ந்தது.
முழுமையான தடை விதிக்கப்பட்டதில் இருந்து புகைக்கும் குற்றங்கள் தொடர்பாக பொது மக்களிடம் இருந்து ஏகப்பட்ட புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. 1,039 உணவகங்களுக்கு எதிராக புகார்கள் செய்யப்பட்டுள்ளன.
பொது மக்கள் இந்த அமலாக்கம் குறித்து தெரிவித்து வரும் ஆதரவு அரசாங்கத்துக்கு ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது. ஆரோக்கியமான மலேசியர்களை உருவாக்கும் நோக்கில் இந்தச் சட்
டம் அமலாக்கம் கண்டுள்ளது. உண் மையில் மக்களைத் தண்டிக்கும் நோக்கம் அரசாங்கத்துக்குக் கிடையாது. இப்பழக்கத்தில் இருந்து விடுபட பல ஆலோசனைச் சேவைகள் வழங்கப்படுகின்றன. ‘ஜோம் குயிட்’ என்ற இணைய தளத்திலும் 03-8883 4400 என்ற தொலைபேசி எண்ணிலும் பொது மக்கள் இதன் தொடர்பில் ஆலோசனை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − 6 =