உணர்வுமிக்க திருநாளாக தீபாவளியைக் கொண்டாடி மகிழ்வோம்

இருள் நீங்கி ஒளியேற்றும் நன்னாளான இந்தத் தீபாவளி திருநாளை அகமும் முகமும் மலர கொண்டாடி மகிழ்வோம். இதுவரை இருந்துவந்த வெறுப்புகளை முழுவதுமாக ஒதுக்கிவைத்து விட்டு தூய எண்ணங்களோடு இந்தப் பெருநாளைக் கொண்டாடுவோம். இந்த ஒருநாளை வருடம் முழுவதுமாக எண்ணிப் பார்க்கும் வண்ணம் சிறப்பாய் மகிழ்ந்திருப்போம் என்று ஓம்ஸ் குழுமத்தின் தலைவர் செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன் தமது தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துக் கொண்டார்.
தமிழர்கள் வீறுகொண்டு எழுந்திட ஓர் உணர்வுமிக்க பெருநாளாக இந்த தீபாவளி அமைய வேண்டும். இது ஓர் எழுச்சி திருநாளாகும். அந்த வகையில் இந்திய சமுதாயம் எழுச்சி பெறுவதற்கு அஸ்திவார திருநாளாக இந்த நாள் அமைய வேண்டும். இந்தியர்கள் போற்றுதலுக்குரியவர்கள். அப்படிப்பட்ட பேரும் புகழும் சீரும் சிறப்புமிக்க ஓரினம் தம்முடைய மாண்பையும் கலையையும் கலாசாரத்தையும் கட்டிக் காக்கும் திருநாளாக இத்தீபத் திருநாள் அமைய வேண்டும் என தமிழ் மலர் குழுமத் தலைவருமான ஓம்ஸ் தியாகராஜன் மேலும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here