உணர்ச்சிமயமான பிரச்சினைகளை கைவிடுங்கள்

0

நாட்டில் உணர்ச்சிமயமான பிரச்சினைகளை உருவாக்க வேண்டாம் என அனைத்து மலேசியர்களுக்கும் மாட்சிமை தங்கிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அமாட் ஷா நேற்று வேண்டுகோள் விடுத்தார்.
அரசியல் சாசனத்தின்படி இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனை மீறி நமது பண்பு நலனுக்கு விரோதமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் வகையில் அத்துமீறி யாரும் செயல்படக் கூடாது என்றார் அவர். அரசியல் சாசனத்தின்படி இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு குடிமக்களுக்கும் அவர்களுக்கான உரிமைகள் உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. அதனை மீறி நமது பண்பு நலனுக்கு விரோதமான தேசிய ஒருமைப்பாட்டிற்கு எதிரான அடிப்படை கட்டமைப்பை உடைக்கும் வகையில் அத்துமீறி யாரும் செயல்படக் கூடாது என்றார் அவர்.
அது அரசியலாக இருந்தாலும் கூட அதற்கும் ஒரு எல்லை இருக்கிறது. அதை யாரும் மீறக் கூடாது. இந்த அரசியல் சர்ச்சைகளும் மோதல்களும் தொடர்ந்து கொண்டிருந்தால் அதன் பாதிப்பு பொதுமக்கள் தலையில் தான் விழும்.
கடந்த 62 ஆண்டுகளாக நாம் பாடுபட்டு உருவாக்கிய அமைதி, ஒருமைப்பாடு, நல்லிணக்கத்தை நாம் இழந்தால் மீண்டும் நாம் அதை பெறவே முடியாது. நான் சொல்வதை நம்புங்கள்.
இதுவரை நடந்ததெல்லாம் நடந்ததாகவே இருக்கட்டும். அதையெல்லாம் மறந்துவிட்டு பிளவுபட்ட உறவுகளை ஒன்றுபடுத்தி எல்லோரும் ஓரணியாக செயல்படுங்கள் என்றார் மாமன்னர்.
நேற்று அரண்மனையில் நடந்த பிறந்தநாள் விழாவில் அவர் பேசினார்.
அரசாங்கம் பல பொருளாதார சுற்றுச்சூழல் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகிறது. ஆனால், அதே நேரத்தில் மக்களின் வாழ்க்கைச் செலவினங்களை குறைக்கவும் வறுமையை ஒழிக்கவும் அவர்கள் பாடுபட வேண்டும்.
ஏழை எளிய மக்களின் கஷ்டங்கள் தீர வேண்டும். பி40 என்ற அடித்தட்டு பிரிவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =