உடைந்த பாட்டில்கள் காலில் குத்திவிடும் என்பதை யாரும் உணர்வதில்லையா?

அலட்சியமாக தூக்கி யெறியப்படும் உடைந்த காலி பாட்டில்கள் இங்கு சுற்றிப் பார்க்க வருவோரின் காலில் தைத்து விடுமே என்பதில் யாருக்கும் பொறுப்பும், அக்கறையும் இல்லை என கோல லங்காட் மாநகர் மன்றத் தலைவர் டத்தோ அமிருல் அஸிஸான் தெரிவித் தார். இங்கு சுற்றுப்பயணிகளைக் கவரும் இடமாக பத்து இடங் களை சுற்றுலாத்துறை தேர்வு செய்துள்ளது. அவற்றில் மக்கள் விரும்பிச் செல்லும் இடமான பந்தாய் கிளானாங் கடற்கரைப் பகுதி களில் பரவலாக உடைந்த பாட்டில்களை மாநகர் மன்றப் பணியாளர்கள் அப்புறப்படுத்தி யுள்ளனர்.
இங்கு வரும் பொது மக்களின் நலன் கருதி இது போன்ற நடவடிக்கைகளில் யாரும் இறங்க வேண்டாமென டத்தோ அமிருல் எச்சரிக்கை விடுத்தார். சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் பொது மக்களின் பங்கு சிறப்பாக இருக்க வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 + four =