உடல் குறையுடையோருக்கு தீபாவளி நல்லெண்ண விருந்து

0

மலேசிய மக்கள் ஒற்றுமை சமூக நல இயக்க ஏற்பாட்டில்,உடல் குறையுடைய குழந்தைகளுக்கு தீபாவளி நல்லெண்ண விருந்து அண்மையில் ஜாவி மௌண்டன் வியூ கோல்ப் ரிசோட்டில் சிறப்புடன் நடைபெற்றது. நாடு முழுவதும் 4,000 கிளைகளை கொண்டு மலேசிய மக்கள் ஒற்றுமை சமூக நல இயக்கம் இயங்குவதாகவும் வருடம் தோறும் பல்வகை நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதாகவும்,உடல் குறைந்தோர்களின் நலனுக்காக இந்நிகழ்ச்சி பினாங்கு மலேசிய மக்கள் ஒற்றுமை சமுக நல இயக்க ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய் யப்பட்டதாக இயக்கத் தலைவர் ஆர்.எஸ். ஷான் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வில் பல்லின குழந்தை
களின் நடனங்கள் இடம் பெற்றன,
அதில் மகிழ்ச்சியாக குழந்தைகள் கலந்துகொண்டு இசையுடன் கூடிய பாடல்களுக்கு நடனமாடியதுடன், ஏற்பாட்டுக் குழுவினர் சார்பில்
சிறப்புப் பரிசுகளும் குழந்தை களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 5 =