உடல் எடையை குறைத்து இளமையாக்கும் டீ தூள் – 1 கிலோ ரூ.40 ஆயிரம்

0

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் குன்னூர் உபாசி அரங்கில் தென்னிந்திய தேயிலை வாரியம் சார்பில் சிறப்பு தேநீர் மேம்பாடு கண்காட்சி நடந்தது.

சிறப்பு தேயிலை தூள்களின் கண்காட்சியில் கீரின் டீ, ஒயிட் டீ, எல்லோ டீ, ஆர்த்தோடக்ஸ் உள்பட பல்வேறு தேயிலை தூள்கள் இடம் பெற்றிருந்தன.

இந்த கண்காட்சியில் புஎர் டீ என்ற தேயிலை தூள் ரகம் வைக்கப்பட்டிருந்தது. இதன் விலை 50 கிராம் 2 ஆயிரம் ரூபாய் என வைக்கப்பட்டிருந்தது பார்வையாளர்ளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இதுகுறித்து உபதலை பொரையாட்டியை சேர்ந்த இயற்கை விவசாயி பிரபு என்பவர் கூறுகையில், நாங்கள் கடந்த 2013-ம் ஆண்டு முதல் இயற்கை முறையில் புஎர் டீ தயாரித்து வருகிறோம். இந்த தேயிலை 50 கிராம் பாக்கெட் 2 ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படுகிறது. இதன் ஒரு கிலோ ரூ.40 ஆயிரம். இதை தயாரிப்பதற்கு 1½ ஆண்டுகள் பிடிப்பதால் இதனை ஏஜ் டீ என்றும் அழைக்கின்றனர்.

இயற்கை முறையில் வளர்க்கப்பட்ட கொழுந்து இலையை மட்டும், ஆக்ஸிஜன் அதிகளவில் படும்படி பெட்டியில் வைத்து 1½ ஆண்டுகள் பூஞ்சைகள் பரவாமல் பதப்படுத்துவோம்.

தேயிலை

பின்னர் தேயிலையை உருவாக்கி விற்பனைக்கு கொண்டு வருகிறோம். மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த தேயிலையை ஆரோக்கிய பானமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை பருகுவதன் மூலம் உடல் எடை குறையும், இளமை, மத்திய நரம்பு மண்டலத்துக்கு நன்மை ஏற்படும். சந்தையில் கிராக்கி ஏற்படும் போது இந்த தேயிலையின் விற்பனை மேம்படும் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 3 =