உடலுழைப்புத் தொழில்களுக்கு ரிம. 2,700ஐ சம்பளமாகத் தருக!

உடலுழைப்புத் தொழிலாளர்களுக்கு 2,700 ரிங்கிட் சம்பளத்தை வழங்கினால், உள்ளூர்க்காரர்கள் அவ்வேலையைச் செய்ய முன்வருவார்கள் என்று மலேசிய தொழிற்சங்க காங்கிரஸின் (எம்டியூசி) தலைமைச் செயலாளர் ஜே.சோலமன் வலியுறுத்தியுள்ளார்.தற்போது வெளிநாட்டுக்காரர்கள் சில வேலைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டதால் கட்டுமானத் துறை, சேவைத் துறை மற்றும் தோட்டத் துறைகளில் கடுமையான தொழிலாளர் பற்றாக்குறை ஏற்பட்டு, அத்துறைகளில் கோடிக் கணக்கான ரிங்கிட் இழப்பு ஏற்பட்டு வருகிறது.

எனவே, இப்பிரச்சினைக்குத் தீர்வாக. கடும் உடலுழைப்பு வேலைகளுக்கு உள்ளூர்க்காரர்களை ஈர்க்க அடிப்படைச் சம்பளமாக 2,700 ரிங்கிட்டை முதலாளிகள் வழங்க முன்வரவேண்டுமென்று சோலமன் கேட்டுக் கொண்டார்.
மலேசியாவைச் சேர்ந்த பலர் சிங்கப்பூர், ஆஸ்திரேலியா மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளுக்குச் சென்று அசுத்தமான, அபாயகரமான, ஆபத்தான வேலைகளைச் செய்யும்போது, இங்கு வழங்கப்படும் குறைந்த சம்பளத்தின் காரணமாக அவர்கள் இங்கு அதே போன்ற வேலைகளைச் செய்ய முன் வருவதில்லை என்று சோலமன் சுட்டிக்காட்டினார்.
உள்ளூர்க்காரர்கள் நிறைவான சம்பளம், நிரந்தர வேலை வாய்ப்பு, இபிஎஃப், சொக்சோ போன்ற பாதுகாப்புச் சலுகைகளைப் பெற முடிந்தால், அவர்கள் இங்கு வேலை செய்யத் தயங்க மாட்டார்கள் என்று அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 − 10 =