உடலுக்கு வலுவூட்டும் முந்திரி

0

முந்திரியில் முந்திரி பழமென நாம் அழைப்பது, உண்மையில் பழமல்ல. அது போலிப்பழம் எனவும் அழைக்கப்படுகிறது. இது பூவின் சூலகப்பகுதியில் இருந்து உருவாவதில்லை. பூவின் அடிப்பகுதியில் உள்ள கடித்த பூக்காம்பு பகுதியே இவ்வாறு பேரிக்காய் உருவத்தில் விருத்தியடைகின்றது. இதனை முந்திரி ஆப்பிள் எனவும் அழைப்பர்.

முந்திரியில் முந்திரி ஆப்பிளின் அடியில் சிறுநீரக வடிவில் அல்லது குத்துச்சண்டையில் பயன்படுத்தப்படும் கையுறை வடிவில் விருத்தியடையும் அமைப்பே உண்மையான பழம் ஆகும். இதன் உள்ளே இருக்கும் உண்ணக் கூடிய பகுதி முந்திரிக்கொட்டை என அழைக்கப்படுகின்றது. அதாவது முந்திரியின் உண்மைப்பழமானது தனி ஒரு விதையைக் கொண்ட பழமாகும்.

முந்திரி தரும் முத்தான நன்மைகள்

முந்திரி சாப்பிட்டால் உடல் எடை கூடும் என்பார்கள். இது தவறான கருத்து. முந்திரியில் கலோரியின் அளவு அதிகம். முந்திரி உடலின் வளர்ச்சிதை மாற்றம் சீராக உதவுகிறது. அதனால் நாள் ஒன்றுக்கு 4 முந்திரி வரை எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடையை குறைக்க முடியும். முந்திரியில் மக்னீசியத்தின் அளவு அதிகமாக இருப்பதால் உயர்ரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவும்.

தசைப்பிடிப்பு, ஒற்றைத் தலைவலி, பதற்றம் மற்றும் மயக்கம் ஆகியவற்றையும் சரி செய்யும். இதில் கால்சியம் நிறைந் துள்ளதால் எலும்புகளுக்கு வலு சேர்க்கும். இரும்பு சத்தை உடல் கிரகிக்க இது உதவுகிறது. வெளியில் இருந்து உடலுக்குள் நுழையும் கிருமிகளை அழிக்கிறது. எலும்புகள் மற்றும் திசுக்கள் வளர்வதை தூண்டுகிறது. சருமம் மற்றும் கூந்தலின் நிறத்துக்குத் துணை புரியும் மெலனின் உற்பத்தி செய்கிறது.மனிதனின் மூளை செல்களை உற்பத்தி செய்வதற்கு, பாலி அன் சாச்சுரேட்டட் மற்றும் மோனோ அன் சேச்சு ரேட்டட் கொழுப்பு அமிலங்களை நம்பியிருக்கிறது.

முந்திரி மூளைக்குத் தேவையான ஆக்ஸிஜனை அனுப்பி இவை சீராக சுரந்து மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவுகிறது. பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாகப் பாதுகாக்கவும் முந்திரி உதவுகிறது. முந்திரியில் உள்ள ரசாயனம் பல்வலியைச் சரி செய்யும் அதோடு காசநோய் மற்றும் தொழுநோய் ஆகியவற்றையும் குணப்படுத்தும். வயோதிகத்தால் ஏற்படும் பார்வைக் கோளாறின் வீரியத்தைத் தள்ளிப் போடும். வைட்டமின் பி- 1, பி- 2, பி- 3, பி- 5, பி- 6 தோல் சம்மந்தப்பட்ட நோய்களிலிருந்தும் காக்கும்.

டைப்– 2 சர்க்கரை நோயிலிருந்து பாது காக்கும் ஆற்றல் முந்திரிக்கு உண்டு. ஆனால் அளவுடன் சாப்பிட வேண்டும். ஆன்டி– ஆக்ஸிடன்ட் நிறைந்தது. ரத்த நாளங்கள், மூட்டுகள் மற்றும் எலும்புகளுக்கு ஆரோக்கியத்தைத் தரும்.

ஊட்டச்சத்து 100 கிராமில்

ஆற்றல்- 553 கே.கால்சியம் – 28 சதவீதம்
சர்க்கரை- 30.19கி – 23 சதவீதம்
புரதம்- 18.22கி- 32.5 சதவீதம்
கொழுப்பு- 48.85கி 146 சதவீதம்
நார்ச்சத்து- 3.3.கி- 8.5 சதவீதம்

வைட்டமின்கள்:

போலேட்- 25 கி. – 6 சதவீதம்
நியாசின் – 1.062 மி.கி- 6.5 சதவீதம்
பான்தோதெனிக் அமிலம்- 0.864 மி.கி- 17சதவீதம்
பிரிடாக்சின்- 0.417மி.கி – 32 சத வீதம்
ரிபோப்ளேவின்- 0.058மி.கி – 4.5சத வீதம்
வைட்டமின்– சி 0.5 மி.கி- 1சதவீதம்
வைட்டமின் இ – 5.31 மி.கி – 35சதவீதம்
வைட்டமின் கே – 34.1 மி.கி – 28சதவீதம்
சோடியம் — 12 மி.கி- 1 சதவீதம்
பொட்டாசியம் — 660 மி.கி – 14சதவீதம்

தாது உப்புகள்:

கால்சியம் (சுண்ணாம்பு)-  37 மி.கி- 4சதவீதம்
காப்பர் (செம்பு) – 2.195 மி.கி – 244சதவீதம்
அயன் (இரும்பு) –  6.68 மி.கி – 83.5சதவீதம்
மக்னீசியம் – 2.92 மி.கி – 73சதவீதம்
பாஸ்பரஸ் – 593 மி.கி – 85சதவீதம்
ஜினிக் (துத்தநாகம்) – 5.78 மி.கி

பக்க விளைவுகள்:

சிலருக்கு முந்திரி சாப்பிடுவதால் தோலில் அலர்ஜி ஏற்படுவதற்கான வாய்ப்பு உண்டு. சிலருக்கு அடிவயிற்றில் வலி, தலைசுற்றல் மற்றும் வாந்தி ஆகியவை ஏற்படலாம். இது போன்ற அறிகுறிகள் முந்திரியை சாப்பிடும் போது தோன்றினால் அதைத் தவிர்த்துவிட வேண்டும். நம் உடல் கால்சியத்தை கிரகிப்பதை ஆக்சலேட் என்னும் ரசாயனக் கலவை தடுக்கிறது. இது முந்திரியில் அதிக அளவில் இருப்பதால் கிட்னி மற்றும் பித்தபைகளில் கல் இருப்பவர்கள் சாப்பிடுவதைத் தவிர்க்கலாம். ஒரு நாளைக்கு 4-5 முந்திரிகளை சாப்பிடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

three − 1 =