உடலுக்கு குளிர்ச்சி தரும் அவல் மோர்க்கூழ்!

அவல், மோர் சேர்த்து குடித்தால் இந்த கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சியாக இருக்கும். இன்று அவல் மோர்க்கூழ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
அவல் – ஒரு கப்

சின்ன வெங்காயம் (தோலுரித்து, பொடியாக நறுக்கியது) – கால் கப்
நறுக்கிய கொத்தமல்லித்தழை – ஒரு டேபிள்ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2 (கீறவும்)
கறிவேப்பிலை – சிறிதளவு
கடுகு – அரை டீஸ்பூன்
உடைத்த உளுந்து – ஒரு டீஸ்பூன்
சீரகம் – அரை டீஸ்பூன்
கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன்
இஞ்சித் துருவல் – ஒரு டீஸ்பூன்
பெருங்காயத்தூள் – ஒரு சிட்டிகை
புளித்த தயிர் – ஒரு கப்
தேங்காய்த்துருவல் – 3 டேபிள்ஸ்பூன்
எண்ணெய், உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:
* அவலை வெறும் வாணலியில் வறுத்து மிக்ஸியில் மாவாக அரைத்துக்கொள்ளவும்.
* தயிரில் தண்ணீர், உப்பு சேர்த்துக் கடைந்துகொள்ளவும் (மோராக இரண்டரை கப் வரை இருக்க வேண்டும்).
* வாணலியில் எண்ணெய்விட்டு சூடாக்கி கடுகு, சீரகம், உளுந்து தாளித்து கடலைப்பருப்பு, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கி, அடுப்பைக் குறைந்த தீயில் வைக்கவும்.

* கடைந்த மோரை அதில் ஊற்றி கலக்கி, அவல் மாவை போட்டு, சிறிதளவு உப்பு சேர்த்துக் கிளறி, தேங்காய்த்துருவல் தூவி, நன்கு வெந்ததும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கிப் பரிமாறவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 − 4 =