உடலுக்குள் நுழைந்த அட்டைப்பூச்சி… குளத்தில் குளித்தபோது நடந்த அதிர்ச்சி சம்பவம்…

கம்போடியாவின் புனோம் பென்னில் என்ற பகுதியில் முதியவர் ஒருவர் வசித்து வந்துள்ளார்.  இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு அந்த முதியவர்  வீட்டின் அருகில் உள்ள குளத்தில்  குளிக்க சென்றுள்ளார்.  குளத்தில்  குளித்துக் கொண்டிருக்கும் போது அவரது உறுப்பில் வீக்கம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. வலியில் அவதியுற்ற அந்த முதியவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.


இதையடுத்து மருத்துவர்கள் அவரை பரிசோதனையில்  அதிர்ச்சியான சம்பவத்தை பார்த்துள்ளனர். முதியவரின் சிறுநீர்ப்பையில் சிறிய கேமரா கொண்டு நுழைத்து பார்க்கையில் அட்டை பூச்சி ஒன்று அவரது உடலுக்குள் புகுந்துள்ளது தெரியவந்தது. குளத்தில் ஆடையின்றி குளித்த போது அவரின் உறுப்பு வழியே அந்த அட்டைப் பூச்சி சென்றிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த அட்டை பூச்சி அவரது ரத்தத்தை உறிஞ்சி பெரிதாகி வருவதும் தெரிய வந்தது. உடலின் மற்ற பாகங்களையும் அந்த அட்டை பூச்சி சேதப்படுத்த ஆரம்பித்துள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அந்த அட்டை பூச்சியானது முதியவரின் உடலில் இருந்து சுமார் 500 மில்லிக்கு அதிகமான ரத்தத்தை உறிஞ்சி விட்டதால், அந்த அட்டைப்பூச்சியை வெளியேற்றுவதில் மருத்துவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் மருத்துவர்கள் மிகவும் சிரமப்பட்டு அட்டைப்பூச்சியை வெளியேற்றி உள்ளனர்.  மேலும் அந்த முதியவரை தங்களது மருத்துவமனை கண்காணிப்பில் வைத்துள்ளனர். இதையடுத்து முதியவர் குணமடைந்து அவரது வீட்டிற்க்கு  சென்றுள்ளார்.

கம்போடியாவில் நிகழ்ந்த இந்த சம்பவம் ஆச்சர்யமாகவும் மிகுந்த சவாலாகவும் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதுபோன்ற சம்பவம் முதல் முறை அல்ல. 2018 ஆம் ஆண்டில், சீனாவின் நெய்ஹைர் நகரில் ஒரு மனிதனின் மூக்கிலிருந்து அட்டைப்பூச்சி  வெளியேற்றப்பட்ட சம்பவமும் நடந்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 14 =