ஈரான் ஈராக்கை தாக்கிய சம்பவம்: மாஸ் ஈரான் வான்வெளியை தனது பயணங்களில் தவிர்க்கும்

ராணுவ நெருக்கடியைத் தொடர்ந்து ஈரானின் வான் வெளி எல்லைப் பகுதியை மலேசிய ஏர்லைன்ஸ் (மாஸ்) தனது பயணங்களில் தவிர்க்கும்.
இலண்டன், ஜெட்ட மதினா முதலிய மாநகரங்களுக்கு செல்லும் போதும் திரும்பும் போதும் ஈராக் வான்வெளியில் மாஸ் பறக்காது என்று நேற்று வெளியிட்ட அறிக்கையொன்றில் அந்நிறுவனம் கூறியது.
மாஸ் சிறப்பான பயணக் கண்
காணிப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. உலக பாதுகாப்பு அறிக்கைகள் மற்றும் வெவ்வேறு நாடுகளின் வானூர்திக் கட்டுப்பாட்டுக் கோபுரங்களின் வழி அனுப்பப்படும் தகவல்களை மாஸ் நன்கு ஆராய்ந்து மதிப்பீடு செய்கிறது. எங்களின் அனைத்து விமானங்களிலும் செயற்கைக் கோள் தொடர்பு இணைக்கப் பட்டிருக்கிறது. இதன் வழி அவ்விமானங்களுக்கு உடனடியாக அத்தியாவசிய தகவல்களை அனுப்ப முடிகிறது. அவசர நிலை களில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு இது வழி வகுக்கும். குறிப்பாக விமானங் களை வேறு தடங்களுக்கு மாற்றுவதற்கு இது உதவி புரியும்.
மாஸ் எப்போதும் பாது காப்பிற்கு மிகவும் முக்கியத் துவம் அளிக்கும் என்று அவ்வறிக்கை மேலும் கூறியது. ஈரான் ராணுவ புரட்சி பாதுகாப்புப் படையின் குர்த்திஸ் படைப்பிரிவின் தளபதி குவாசிம் சுலைமானி சமீபத் தில் ஈராக் சென்றிருந்தார்.
அப்போது கடந்த வெள்ளிக் கிழமையன்று ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தி அவரை அமெரிக்கா கொன்றது.
அடுத்தடுத்து பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. அதையடுத்து இருநாடுகளுக்கும் இடையே சண்டை மூளும் சூழ்நிலை உருவாகியுள்ளது. புதன்கிழமை அதிகாலை யில் அமெரிக்கப் படைகள் தங்கியிருக்கும் ஈராக் ராணுவத் தளங்களை ஈரான் ஏவுகணைகள் மூலம் தாக்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

8 − five =