ஈப்போ லிட்டில் இந்தியாவில் பழுதாகிக் கிடக்கும் அலங்கார வளைவு சுவர் சரி செய்யப்பட வேண்டும்

ஈப்போ லிட்டில் இந்தியா வளாகத்தின் முன் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் அலங்கார வளைவு சுவர் பழுதாகி கிடக்கும் வேளையில் அதனை சரி செய்ய வேண்டும் என்று ஈப்போ மாநகரமன்றத்தின் கூட்டத்தில் ஈப்போ மாநகர்மன்ற உறுப்பினர் ஆதி.கணேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சுற்றுப் பயணிகள் அதிகமானோர் இந்த பகுதிக்கு வருகின்றனர். அந்த சுவர் பழுதாகியிருக்கும் வேளையில், அதிலிருந்து சிமெண்டுகள் கொட்டிய வண்ணம் உள்ளன.
அப்படியிருக்க, அங்கு செல்லும் வாகனங்கள், சுற்றுப் பயணிகள் மீது சிமெண்டு துகள்கள் மேலே விழுந்து ஏதேனும் விபத்துகளை ஏற்படுத்தும் என்று பயமாக உள்ளது. இந்தியர்கள் அதிகமாக வியாபாரம் செய்யும் அந்த பகுதியில் காப்பாற்ற ஈப்போ மாநகர்மன்றம் முற்பட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × 2 =