ஈப்போ மாநகர் மன்றம் பெர்சியாரான் கிட் சாலையை மேம்படுத்த வேண்டும்

இங்குள்ள புந்தோங் ஸ்ரீ புத்ரி இடைநிலைப்பள்ளி, சுங்கை பாரி ஆண் இடைநிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளுக்குச் செல்பவர்கள் வாகன நெரிசலில் மாட்டிக் கொள்ளாமல் வர முடியாது. லெங்கோக் சுங்கை பாரி சாலையில் ஏற்படும் வாகன நெரிசலை போக்குவதற்கு அரசாங்கம் பெர்சியாரான் கிட் சாலையை மேம்படுத்த வேண்டும் என்று பேராக் நேசக்கரங்கள் சங்கத்தின் தலைவர், இரா.ஜெயசீலன் கேட்டுக் கொண்டுள்ளார்.
காலையில் பள்ளிக்கு செல்லும் நேரமும், மதியம் பள்ளி முடிவடையும் நேரத்திலும் லெங்கோக் சுங்கை பாரி சாலையில் வாகன நெரிசல் மோசமாக ஏற்படுகிறது. ஒரே பாதையில் செல்ல வேண்டும். ஒரே சாலையில் மீண்டும் போக வேண்டும் என்று இருந்தால் வாகன நெரிசல் ஏற்படும். ஆதலால், இப்பிரச்சினையைக் களைய ஈப்போ மாநகரமன்றம் பெர்சியாரான் கிட் சாலையை மேம்படுத்தி கொடுத்தால் மாணவர்களுக்கும் பெற்றோர் களுக்கும் உதவியதாக இருக்கும். அதிலும் லெங்கோ சுங்கை பாரி சாலை மிகவும் சிறியதாகும். அதில் வாகனங்கள் போய் வருவது பெரும் கடினமே. அச்சாலையைப் பயன்படுத்தும் பெற்றோர்கள் வாகன நெரிசலினால் மன உளைச்சலுக்க்கு ஆளாகின்றனர். அதிலும் சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்படுகின்றன. மாணவர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை கொடுத்து ஈப்போ மாநகரமன்றம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து சுங்கை பாரி ஆண் இடைநிலைப்பள்ளி, ஸ்ரீ புத்ரி இடைநிலைப்பள்ளிகளின் நிர்வாகமும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen − 1 =