ஈப்போ பார்லிம் ஏயோன் பேரங்காடியில் தீபாவளிக்கான அனைத்துப் பொருட்களும் கிடைக்கும்

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 1 மாதகாலம் எஞ்சியிருக்கும் வேளை ஜி.எம்.குமரன் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஈப்போ பார்லிம் ஏயோன் பேரங்காடியில் அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கி 18-ஆம் தேதிவரை பண்டிகைக்கு வேண்டிய அனைத்துப் பொருட்களும் விற்கப்படுகின்றன என அதன் மேலாளர், நந்தகோபாலன் விஜயகுமாரன் தெரிவித்துள்ளார்.
பெரியவர் தொடங்கி சிறுவர்கள் வரை அனைவருக்கும் தேவையான பொருட்கள் இந்த விற்பனை சந்தையில் விற்கப்படுகின்றன. அதிலும் நியாயமான விலையில் தரமான பொருட்கள் தருவிக்கப்படுகின்றன.
ஈப்போ மக்கள் மட்டுமல்லாமல் பேராக் மாநில மக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தீபாவளிக்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
புதிய டிசைன் புடவைகள், டாப்ஸ், ஆண்களுக்கான வேட்டி, ஜிப்பா, கவரிங் நகை, இனிப்பு பண்டங்கள் என பல வகை பொருட்கள், பச்சை குத்தும் சேவை வழங்கும் 50 முகப்புகள் இங்கு போடப்பட்டுள்ளன.
காலை 10 மணி தொடங்கி இரவு 10 மணி வரை மக்கள் முக கவசம் அணிந்து தான் உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர்.
அதனை எங்களுடைய ரேலா அதிகாரிகள் 3 நுழைவாசலிலும் கவனிக்கிறார்கள்.
மேலும், இந்த விற்பனை சந்தை நடைபெறுவதை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு திறமைக்கு ஓரு மேடை, சிறுவர் ஆடை அலங்கார போட்டி உட்பட பல வகை அங்கங்களும் நடைபெறுகின்றன.
அதனுடன், இணையதளம் வழி, வர்ணம் தீட்டும் போட்டி நடத்தி பரிசுகளும் வழங்குகிறோம். தொடர்ந்து, பினாங்கு (பிறை, சாய் லெங் பார்க்), நெகிரி செம்பிலான், தாசேக் சென்ட்ரல் ஸ்கூடாய் ஆகிய இடங்களில் தீபாவளி விற்பனை சந்தை நடைபெறுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − 7 =