ஈப்போவில் கனத்த மழையுடன் கூடிய புயல் காற்று

0

நேற்று மதியம் ஈப்போ வட்டாரத்தில் கனத்த மழையுடன் கூடிய புயல் காற்று வீசியது. அவ்வேளையில், லாகாட் தாமான் பட்ரிஷா சாலையில் இந்தியப் பெண் செலுத்தி வந்த கார் மீது மரம் சாய்ந்தது.
இதனால் அம்மாதுவின் கார் பலத்த சேதமடைந்தது. ஆனால், ஓட்டுனர் சொற்ப காயங்களுடன் உயிர் தப்பினார். பொதுமக்கள் காரிலிருந்து அவரை வெளியேற்றியதுடன் சிகிச்சைக்காக ஈப்போ ராஜா பைனுன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து தீயணைப்பு பாதுகாப்புப் படையினர் மரத்தை வெட்டியெடுத்து அப்புறப்படுத்தினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen − six =