இ-காசே பங்கேற்பாளர்களுக்கு “கியோஸ்” ரக கடை ஈப்போ மாநகர்மன்றம் வழங்கியது

0

பி40 குழுவில் இடம் பெற்றிருக்கும் இ-காசே பங்கேற்பாளர்களுக்கு உதவும் முயற்சியாக நேற்று முன்தினம் ஈப்போ மாநகர்மன்றம் 8 பேருக்கு “கியோஸ்’ ரக கடைக்கான சாவியை வழங்கியது.
இந்நிகழ்வில் வீடமைப்பு, ஊராட்சி, சுற்றுலாத் துறை ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ நோலி அஷிலின், ஈப்போ மாநகர்மன்றத்தலைவர் டத்தோ ஹாஜி ருமாய்சி பஹார்டின், ஈப்போ மாநகர்மன்ற கவுன்சிலர்கள் வருகையளித்தனர்.
இந்நிகழ்வில் புந்தோங் வட்டாரத்தைச் சேர்ந்த டேனியல் டேவிடா, ஜஸ்வீர் சிங் ஆகியோருக்கு கடைக்கான சாவி, ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.
டேனியல் செண்டோல் வியாபாரமும், ஜஸ்வீர் இந்தியர்களின் உணவுகளை விற்கவிருப்பதாகவும் செய்தியாளரிடம் குறிப்பிட்டார்.
இதனிடையே, டத்தோ ஹாஜி ருமாய்சி உரையாற்றுகையில், இந்த வருடம் தாமான் பெர்பாடுவான், சிம்மோர், தாமான் ரிஷா, ராப்பாட் செத்தியா, அம்பாங், புந்தோங் ஆகிய இடங்களில் 40 கியோஸ் ரக கடைகள் கட்டப்பட்டுள்ளன. வறுமையான குடும்பங்களுக்கு இந்த கடையை வழங்குவோம்.
அதை வைத்து அவர்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ள வேண்டும்.
வியாபாரம் செய்து பி40 குடும்பங்கள் முன்னேற ஈப்போ மாநகர்மன்றம் வழிவகுக்கும். உங்களுக்கு மீன்களை கொடுப்பதை விட, மீன் பிடிக்க கற்றுக் கொடுப்பதே மேல். வறுமைக் கோட்டிலிருந்து மக்கள் வெளிவர இது நல்ல வாய்ப்பு என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × 5 =