இஸ்லாத்தை இழிவு படுத்திய விவகாரம் அம்னோ உறுப்பினர் மன்னிப்புக் கோரினார்

0

நபி முகமதுவை இழிவுபடுத்திய நபர் வங்சா மாஜு நாடாளுமன்ற உறுப்பினர் என்று தவறாகக் கருதி, அவருக்கு எதிராக முகநூலில் விமர்சனங்கள் எழுதிய அம்னோ உறுப்பினர் ஒருவர் தனது தவற்றை உணர்ந்து, அதற்காக மன்னிப்பு கோரினார். இந்தத் தவறான விமர்சனத்தால் பேரளவில் பாதிக்கப்பட்ட டான் யீ கியூ, அவரின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டார்.
நபியை இழிவுபடுத்திய நபர் ‘அல்வின் சோவ்’ என்ற புனை பெயரில் எழுதியிருக்கிறார். டான் யீ கியூதான் ‘அல்வின் சோவ்’ என்று நினைத்து அம்னோ உறுப்பினரான ஸாயிட் ஸுல்கிப்ளி கடந்த மார்ச் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் முகநூலில் அவரைத் தாக்கி எழுதியதோடு, அவருக்கு எதிராக போலீஸிலும் புகார் செய்துள்ளார்.
இந்த மன்னிப்பை டான் ஏற்றுக் கொண்டார். இச்சம்பவம், தகவல்களைப் பரிசோதிக்காமல் அவசரப்பட்டு விமர்சிப்பவர்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும் என்று டான் கூறினார்.
இதற்கிடையில் ‘அல்வின் சோவ்’ என்ற புனை பெயரில் சமய நிந்தனைக் குற்றத்தைப் புரிந்த நபருக்கு கடந்த ஆகஸ்ட் 6ம் தேதி 30 மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
டான் கடந்த மே 2ம் தேதி ஸாயிட்டுக்கு எதிராக வழக்கு பதிவு செய்திருந்தார். அவருடைய முகநூல் பதிவு தமது நற்பெயருக்குக் களங்கம் விளைவித்ததாக டான் கூறினார். அவரைப் பிரதிநிதித்து அப்துல் ஹலிம் அப்துல் காரிம் மற்றும் நூர் இஸைடா ஸமானி ஆகியோர் ஆஜரான நிலையில், ஸாயிட்டைப் பிரதிநிதித்து லோகேந்திரன் ஆஜரானார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 − two =