இவ்வருட இறுதிக்குள் ரிம2.5 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது ஏர் ஆசியா

0

ஏர் ஆசியா இவ்வாண்டு இறுதிக்குள் ரிம2.5 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது என்று ஏர் ஆசியாவின் தலைமை செயல்முறை அதிகாரி டோனி பெர்னாண்டஸ் நேற்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள இந்த விமான நிறுவனம் அதன் ஜப்பான் நடவடிக்கைகளையும் பயணங்களையும் மீண்டும் மறுஆய்வு செய்யும் என்று பெர்னாண்டஸ் மேலும் தெரிவித்தார்.
இந்நிறுவனம் வங்கி கடன்களிலிருந்து ரிம150 கோடியையும், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமிருந்து மற்றொரு ரிம.100 கோடியினையும் திரட்ட திட்டமிட்டுள்ளதாக பெர்னாண்டஸ் அந்த அறிக்கையில் தெரிவித்தார்.
கோவிட்-19யின் தாக்கத்தினால் உருவான பண நெருக்கடி காரணமாக விமான நிறுவனம் ஜப்பானிலும் இந்தியாவிலும் அதன் விமான நடவடிக்கைகளை மறுஆய்வு செய்யும் கட்டாயத்தில் உள்ளது என்றார் அவர்.
ஏர் ஆசியா அண்மையில் வெளியிட்ட அறிக்கையின் படி, ஜூன் மாதத்தில் சுமார் 170 விமானிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள் என்று தெரிய வந்தது.
மேலும், வெளிநாட்டு மற்றும் உள்ளூர் விமான பிரிவுகளில் சுமார் 3,000 வேலைகள் பாதிக்கப்படும் என்று எதிர்பார்ப்பதாக அவர் கூறினார்.
ஆகஸ்ட் நடுப்பகுதியில், குறைந்த கட்டண விமான நிறுவனமான ஏர் ஆசியா கோலாலம்பூர் மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களைத் தொடங்கியது. அதைத் தொடர்ந்து இத்திட்டம் பிற சர்வதேச இடங்களிலும் விரிவுபடுத்தப்பட்டது.
இதற்கிடையில், வாடகை விமான நிறுவனமான பிஓசி ஏவியேஷன் ஏற்கெனவே ஏர் ஆசியாவுக்கு எதிராக இங்கிலாந்தில் 23 மில்லியன் அமெரிக்க டாலர் (ரிம95.4 மில்லியன்) நிலுவைத் தொகைக்கு நோட்டீஸ் தாக்கல் செய்துள்ளது.
ஏர் ஆசியா நிறுவனம் பிஓசி ஏவியேஷனில் இருந்து நான்கு விமானங்களை வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
டிசம்பர் 2018 தேதியிட்ட நான்கு ஒப்பந்தங்களின் கீழ் ஏர் ஆசியா நிறுவனம் அந்த குத்தகை ஒப்பந்தத்தை மீறியதாக பிஓசி ஏவியேஷன் குற்றம் சாட்டியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + seventeen =