இவர்களின் தவறுகளுக்கு நாங்கள் பலிகடாவா? நஜிப் கேள்வி

நாட்டில் சமய சர்ச்சைகள் அதிகரித்திருப்பதற்கு பக்காத்தான் ஹராப்பானே காரணம். ஆனால் பழியை அம்னோ – தேசிய முன்னணி மீது போடுகிறார்கள் என முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் கூறினார்.
நாட்டில் அதிகரித்துவரும் சமய விவகாரங்களும் அரசியல் நிலைத் தன்மையற்ற சூழலும் நாடு எதிர்நோக்கும் 5 நெருக்கடிகளில் முக்கியமானவை என்றார் அவர்.
பக்காத்தான் தலைவர்கள் பல்வேறு விஷயங்களில் ஒருவர் மற்றவருக்குள்ளேயே முரண்படுகிறார்கள். குறிப்பாக காட் எனப்படும் ஜாவி எழுத்தோவிய விவகாரம் அதில் ஒன்று. அதைக் கொண்டு வந்ததே பக்காத்தான்தான். ஆனால் அதை எதிர்ப்பது ஜசெக, பிகேஆர் கட்சிகள்.
அதேபோல் டோங் ஸோங்கை இனவாதிகள் என்று சொன்னவர்களும் இவர்கள்தான். அதனை ஆதரிப்பவர்களும் ஜசெக, பிகேஆர் கட்சிகள்தான். ஸக்கீர் நாயக்கை கண்டித்த அமைச்சர் சைட் சாடிக் பின்னர் அவரோடு நட்பு பாரட்டுகிறார். ஆனால் எல்லாவற்றுக்கும் நாங்கள் காரணம் என்கிறார்கள் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 + 2 =