இளவரசர் எட்வர்ட் மாமன்னரை சந்தித்தார்

0

மலேசியாவிற்கு 2 நாள் வருகை மேற்கொண்டுள்ள பிரிட்டன் இளவரசர் எட்வர்ட் மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரி யாத்துடின் அல்-முஸ்தபா பில் ஷாவுடன் அதிகாரப்பூர்வ சந்திப்பை நடத்தினார்.
இந்த சந்திப்பில் பேரரசியார் துங்கு அஸிசா அமீனா மைமுனா இஸ்கண்டாரியா உடனிருந்தார்.
கடந்த ஜனவரியில் நாட்டின் 16 ஆவது பேரரசராக பதவி ஏற்றதைத் தொடர்ந்து பிரிட்டன் அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் சுல்தான் அப்துல்லா நடத்தும் முதலாவது சந்திப்பு இதுவாகும். இரண்டு நாள் மலேசிய வருகையில் இளவரசர் எட்வர்ட் இங்கு பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.
ஆக கடைசியாக கடந்த 2004 இல் இளவரசர் எட்வர்ட் மலேசியாவிற்கு வருகை புரிந்திருந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen − six =