இளநீரும், கங்கோங் கீரையும் கொரோனா வைரஸுக்கு மருந்து?

0

கொரோனா வைரஸைத் தடுக்க இளநீரும் கங்கோங் கீரையும் மருந்தாகப் பயன்படுத்தலாம் என்று கூறப்படுவதை சுகாதார அமைச்சு பரிந்துரைக்கவில்லை என சுகாதாரத் துறையமைச்சர் ஸுல்கெஃப்லி குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில், டாக்டர் நோர்டின் டாருஸ் என்பவர் அந்த நோய் கண்டவர்கள் அடிக்கடி குளிப்பதோடு, இளநீரையும் கங்கோங் கீரையையும் உட்கொள்ள வேண்டுமென பரிந்துரைத்துள்ளார்.
அதனை பின்பற்றுவதை பொதுமக்களின் முடிவுக்கே விட்டு விடுவதாகவும் ஆனால், சுகாதார அமைச்சைப் பொறுத்த வரை, அதிகாரத்துவ சுகாதார நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டுமென வலியுறுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அறிவியல்பூர்வ முடிவுகளின்படி, கைகளை அடிக்கடி கழுவ வேண்டும், இருமல் மற்றும் தும்மலுக்குப் பின்னர் கட்டாயமாகக் கைகளைக் கழுவ வேண்டும், எப்போதும் முகக் கவசத்தை அணிய வேண்டும், இருமல் தும்மலின்போது கைக்குட்டையால் வாயை மூட வேண்டும், காய்ச்சல், இருமல் அல்லது சுவாசிக்க சிரமம் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரைக் காண வேண்டுமென அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செய்தியாளர் கூட்டத்தில் பேசிய சுல்கிஃப்லி, சீனாவுக்குச் சென்று வந்த 31 வயது நபர் கொரோனா வைரஸினால் தாக்கப்பட்டிருப்பதாகவும், அந்தப் புதிய நோயாளியோடு, நாட்டில் 18 பேர் அந்நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here