இலவச கோவிட் பாதுகாப்பு திட்டம்


கோவிட்-19 தாக்கத்தைக் குறைக்க நாடு இரண்டாவது முழு நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை அமல்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, மலேசியர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி திட்டத்தையும் கோவிட்-19யால் தனிமைப்படுத்தப்பட்டால் சிறந்த சுலுகைகளையும் வழங்குவதன் மூலம் ஏஐஏ மலேசியா தனது ஆதரவை விரிவுபடுத்துகிறது.
ஏஐஏ மலேசியாவின் இந்த இரண்டு சலுகைகளின் மூலம் கோவிட்-19 நோய்த்தொற்றுக்கு மத்தியில் மலேசியர்களின் உடல்நலம், பாதுகாப்பு ஆகியவற்றிக்கு முன்னுரிமை வழங்குவதாக நேற்று ஓர் அறிக்கையில் அறிவித்துள்ளது.
அனைத்து தனியார் மருத்துவமனையிலும் கோவிட்-19 பரிசோதனை மற்றும் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ள தனது வாடிக்கையாளர்களுக்கு உதவுகின்றது ஏஐஏ மலேசியா.
சில விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, இந்த சலுகைகளுக்காக பதிவுபெற ஆர்வம் கொண்ட ஏஐஏ மலேசியாவின் வாடிக்கையாளர்களும் அனைத்து மலேசியர்களும் ஏஐஏ மலேசியாவை தொடர்புக் கொள்ளலாம்.
இலவச கோவிட்-19 தடுப்பூசி எனும் திட்டத்தின் மூலம் ஏஐஏ வாடிக்கையாளர்கள் நோய் எதிர்ப்பு சக்தியை அடைய முடியும். இந்த சலுகையின் மூலம், ஏஐஏ தனது வாடிக்கையாளர்களுக்கு மன அமைதியை தருவது மட்டுமின்றி கோவிட்-19 தாக்கத்துடன் போராட சில உத்திகளையும் வழங்குகின்றது.
அதுமட்டுமின்றி, கோவிட்-19 தடுப்பூசியின் பக்க விளைவுகளால் ஒரு நபர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால் ஒரு நாளைக்கு ரிம.100 (14 நாட்கள் வரை) பெறும் வாய்ப்பை வாடிக்கையாளர்கள் இத்திட்டத்தின் வழி பெறலாம். மாறாக, கோவிட்-19 நோயால் மலேசியாவில் இறந்துவிட்டால் ரிம.20,000 வரை தொகையையும் பெறலாம்.
18 முதல் 70 வயதுக்குட்பட்ட மலேசியர்கள் இந்த இலவச அட்டைக்கு பதிவு செய்யலாம். ஏ.ஐ.ஏ டுகைந ஞடயnநேசள மூலம் அவர்கள் ஜூன் 3 மற்றும் 14 ஜூன் 2021 க்கு இடையில் தங்கள் அட்டையை செயல்படுத்த முடியும். மேலும், இரண்டாவது சலுகையான வீட்டு தனிமைப்படுத்தலுக்கான பாதுகாப்பு உட்பட இலவச கோவிட்-19 பரிசோதனையும் வாடிக்கையாளர்கள் பெறலாம்.
இந்த சலுகையின் மூலம், வாடிக்கையாளர்கள் கோவிட்-19 தாக்கத்தால் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டால் சிறந்த வசிதிகளை அனுபவிப்பதோடு இலவச கோவிட்-19 பரிசோதனைகளையும் செய்துக் கொள்ளலாம்.
மேலும், கோவிட்-19 நோயால் கண்டறியப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு உதவ இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்பட்ட ஒவ்வொருக்கும் ரிம.1,000 ரொக்க நிவாரணத்தை ஏஐஏ மலேசியா வழங்குகிறது.
• கூடுதலாக, இது கோவிட்-19 காரணமாக ஏற்படும் மரணத்தையும் உள்ளடக்கியது. மரண மடைந்த கோவிட்-19 நோயாளின் குடும்பத்தினருக்கு ரிம.5,000 (புதிய வாடிக்கையாளருக்கு) / ரிம.10,000 (ஏஐஏவின் தற்போதைய வாடிக்கையாளருக்கு) செலுத்தப்படும். ஏஐஏ வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் இல்லாமல் இந்த அட்டை வழங்கப்படுகிறது. இது ஜூன் 1 முதல் 20 ஜூன் 2021 வரை நடைமுறைக்கு வருகிறது.
20 தகுதி வாய்ந்த வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 30, 2021 வரை இந்த இலவச அட்டையை அனுபவிக்கும் வாய்ப்பை பெறலாம்.
இந்த சமீபத்திய பிரசாதங்களை அறிமுகப்படுத்துவது குறித்துஏஐஏ மலேசியாவின் தலைமை நிர்வாக அதிகாரி பென் என்ஜி கூறுகையில், “கோவிட்-19 தாக்கத்தினால் பலர் கவலையாக இருப்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். மலேசியாவில் ஒரு முன்னணி காப்பீட்டாளர் என்ற வகையில், மலேசியர்களின் கவலைகளைத் தணிக்க நாங்கள் இந்த திட்டங்களை தொடங்கியுள்ளொம். இத்திட்டங்கள் இந்த சவாலான காலங்களில் எங்களி வாடிக்கையாளர்களுக்கு சரியான பாதுகாப்பை வழங்கும் என்று நான் நம்புகின்றேன்” என்றார் அவர்.
“தற்போது எங்கள் அட்டையை அனைத்து தனியார் மருத்துவமனைகளிலும் பயன்படுத்தும் அனுமதியைப் பெற்றிருப்பதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். இன்று நாங்கள் அறிவிக்கும் இந்த புதிய இலவச அட்டைகள் எங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகின்றன” என்றார் அவர். ஏஐஏ மலேசியாவின் இந்த சலுகைகள் மற்றும் சேவைகள் குறித்த முழு விவரங்களுக்கு, வாடிக்கையாளர்கள் றறற.யயை.உடிஅ.அல எனும் அகப்பக்கத்தை நாடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eleven − six =