இலங்கை அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் இன்றுடன் நிறைவு

0

இலங்கை அதிபர் சிறிசேனாவின் பதவிக்காலம் முடிவடைய இருப்பதால், வரும் 16-ம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அதிபர் தேர்தலில் சுமார் 35 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
ஆளும் ஐக்கிய தேசிய கட்சி வேட்பாளராக சஜித் பிரேமதாசாவும், எதிர்க்கட்சி வேட்பாளராக இலங்கை பொதுஜன பெரமுனா சார்பில் முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய ராஜபக்சேவும் போட்டியிடுகின்றனர். 
இலங்கை இறுதிக்கட்ட போரின்போது பாதுகாப்பு ஆலோசகராக இருந்த கோத்தபய ராஜபக்சே, அப்பாவி தமிழர்கள் பலர் கொல்லப்பட்டதற்கும், காணாமல் போனதற்கும் காரணமாக இருந்தவர் என்ற குற்றச்சாட்டு இவர்மீது உள்ளது.
அதிபர் தேர்தலில் கோத்தபய ராஜபக்சேவுக்கும், சஜித் பிரேமதாசாவுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இலங்கை அதிபர் தேர்தலுக்கான அனல் பறக்கும் பிரசாரம் இன்று நள்ளிரவுடன் ஓய்கிறது. இதையடுத்து, இறுதிக்கட்ட தேர்தல் பிரசாரத்தில் அனைத்துக் கட்சி வேட்பாளர்களும் ஈடுபட்டு வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

18 − fifteen =