இலங்கைப் பிரஜை விவேகானந்தன் மரணம்; விசாரணை வேண்டும்

0

இலங்கையைச் சேர்ந்த விவேகானந்தன் மரணம் தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தக் கோரி மலேசிய உலக மனிதநேய இயக்கத் தலைவர் டி.கமலநாதன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இரு தினங்களுக்கு முன்னர் இலங்கையைச் சேர்ந்த பிருந்தாஜினி என்ற ஒரு பெண் என்னை அழைத்தார்.
ஜொகூர் மாசாயில் அவரின் கணவர் விவேகானந்தன் மரணமடைந்து விட்டதாகவும் கடுமையாகத் தாக்கப்பட்டதால், அவரின் தலையில் காயங்கள் ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
மலேசியாவில் பணிபுரியும் என் கணவரின் நண்பர் ஒருவர், இந்தத் தகவலை தன்னிடம் தெரிவித்ததாக பிருந்தாஜினி என்னிடம் கூறினார்.
விவேகானந்தன் மரணம் தொடர்பில் போலீஸார் விசாரணை நடத்தக்கோரி செந்தூல் காவல் நிலையத்தில் புகார் செய்திருப்பதாக கமலநாதன் நிருபரிடம் தெரிவித்தார்.
இவரின் மரணத்திற்கு உண்மையான காரணத்தைக் கண்டறியும்படி கேட்டுக் கொண்டிருப்பதாக அவர் தெரிவித்தார். சவப் பரிசோதனைக்குப் பின்னர் இவரின் சடலம் ஒப்படைக்கப்பட்டது. தலையில் ஏற்பட்ட கடுமையான காயத்தால் அவர் மரணமடைந்திருப்பதாக சவப் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று கமலநாதன் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 13 =