இலகுரக விமானம் நெடுஞ்சாலையில் அவசரத் தரையிறக்கம்

இலகு ரக விமானம் ஒன்று வடக்கு-தெற்கு நெடுஞ்சாலையின் 47.8 ஆவது கிலோமீட்டரில் நேற்று அவசரமாகத் தரையிறங்கியது.
அந்த விமானம் ஏன் நெடுஞ்சாலையில் தரையிறங்கியது என்பது தொடர்பான தகவல் எதுவும் தெரியவில்லை என கூலாய் மாவட்ட தலைமை போலீஸ் தொக் பெங் ஹாய் கூறினார்.
இதனிடையே தொழில்நுட்பக் கோளாறின் காரணமாக செனாய் அனைத்துலக விமான நிலையத்தில் தரையிறங்கப் போவதாக நேற்று காலை 10.40 மணிக்கு விமானியிடமிருந்து அழைப்பு வந்ததாக ஜொகூர் வான் போக்குவரத்து கட்டுப்பாட்டு கோபுரத்தில் இருந்து கூறப்பட்டதாக மலேசிய வான் போக்குவரத்துக் கழகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஷெஸ்டர் வூ கூறினார்.
சிங்கப்பூர் பிரிமியர் விமான நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த இலகு ரக விமானம் மலாக்காவிலிருந்து செனாய் அனைத்துலக விமான நிலையத்திற்குப் பயணித்ததாக அவர் குறிப்பிட்டார்.
அந்த விமானத்தில் பயணித்த 2 சிங்கப்பூர் விமானிகள் காயம் எதுவுமின்றி தப்பியதாக அவர் தெரிவித்தார்.
அந்த விமானம் அவசரமாகத் தரையிறங்கியது தொடர்பான விசாரணையை போக்குவரத்து அமைச்சு தொடங்கும் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here