இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி நேப்பாள ஆடவர் பலி!

0

இங்கு லொன்டாங் மஸ்ஜிட் தானா தொழிற்பேட்டைக்கு அருகிலுள்ள ஓர் உணவு உற்பத்தி தொழிற்சாலையில் வேலை செய்து வந்த நேப்பாள ஆடவர் ஒருவர் இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி அரைபட்டு உயிரிழந்த சம்பவம் நேற்று முன்தினம் காலை 7.00 மணியளவில் நிகழ்ந்தது.

22 வயதுடைய அவ்வாடவர் சம்பவத்தின் போது இறைச்சி அரைக்கும் இயந்திரத்தைப் பழுது பார்த்துக் கொண்டிருந்ததாக நம்பப்படுகிறது.

இயந்திரத்தின் மின்சார செயல்பாட்டை அவர் நிறுத்தவில்லை. பழுதை சரி பார்த்துக் கொண்டிருந்த போது எதிர்பாரா விதமாக அந்த இயந்திரம் இயங்கத் தொடங்கியுள்ளது. இயந்திரம் அவ்வாடவரை கவ்வியதோடு அதில் அரைப்பட்டு பரிதாபமாக இறந்துள்ளார். மீட்புப் படையினர் 9 நிமிடங்களில் படுகாயங்களுடன் உயிரிழந்த நிலையில் அவ்வாடவரை மீட்டதாக மலாக்கா மீட்புப் படைத் தலைவர் ஸுல்கைரானி ரம்லி தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here