இறுதி நேரத்தில் கட்சித் தாவிய தவளைகள்

முன்னாள் பிரதமர் துன் மகாதீர் இறுதித் தவணை வரை பிரதமர் பதவியில் இருக்க வேண்டும் என மேஜையை தட்டி ஆர்பாட்டம் செய்த சில தவளைகள் இறுதியில் கட்சித் தாவி சென்று விட்டதாக எதிர்க்கட்சி நாடாளுமன்றத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் சாடினார். இந்த தவளைகள் இறுதி நேரத்தில் பக்காத்தான் ஹராப்பானுக்கு எதிராக செயல்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் புதிய அரசாங்கத்தை அமைத்து விட்டதாக அவர் சொன்னார்.
நேற்று மக்களவை கூட்டத் தில் பிகேஆர் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பேரரசர் உரைமீதான விவாதத்தின் போது பேசினார்.
‘இந்த விவகாரத்தில் பிரதமரின் நியமனம் குறித்து பேரரசரின் அதிகாரத்தைப் பற்¹றி நான் கேள்வி எழுப்ப வில்லை’ என்றார் அவர்.
கடந்த பொதுத் தேர்தலில் கட்சிக்குத்தான் மக்கள் அதிகாரத்தை கொடுத்தனர். நாடாளுமன்ற உறுப்பினருக்கு அல்ல என அவர் சொன்னார்.
கடந்த பிப்ரவரி இறுதியில் பக்காத்தான் ஹராப்பான் அரசாங்கம் கவிழ்ந்ததைத் தொடர்ந்து முதல் முறையாக நாடாளுமன்றத்தில் அன்வார் இந்த விவாகரம் குறித்து விவாதத்தில் ஈடுபட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணிக்கு தான் வெற்றியைத் தந்துள்ளனரே தவிர தனிஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கு அல்ல என அவர் சுட்டிக் காட்டினார்.
மகாதீர் முழு தவணை வரை பிரதமராக இருக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த அஸ்மின் அலி இறுதியில் பத்து எம்பிக்களுடன் வெளியேறி பெர்சத்து தலைவர் முஹிடினுடன் இணைந்து பெரிக்காத்தான் அரசாங்கத்தை அமைக்க உடந்தையாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

3 × three =