இருவர் அணி தாவினாலும் பெரிக்காத்தானுக்கு பெரும்பான்மை இல்லை!

கெஅடிலானைச் சேர்ந்த இரு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி தாவி ஆதரவளித்தாலும் நாடாளுமன்றத்தில் பெரிக்காத்தான் நேஷனலுக்கு பெரும்பான்மை இல்லை என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிக் கூட்டணி போதுமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை யைக் கொண்டிருக்கவில்லை. எங்களை விட்டு இருவர் சென்றாலும், நடப்பு அரசாங்கம் சிறிய பெரும்பான்மை அரசாங்கமாகவே உள்ளது என்றார் அவர். கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜொகூர் தெப்ராவ் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டீவன் சூங், சரவாக் ஜூலாவ் நாடாளுமன்ற உறுப்பினர் லேரி ஸெங் ஆகியோர் கெஅடிலானில் இருந்து விலகி பிரதமருக்கு ஆதரவு தெரிவித்தனர். கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் 2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் வாக்கெடுப்பில் அரசாங்கத்திற்கு ஆதரவாக 111 வாக்குகள் கிடைத்தன. எதிர்க்கட்சிக் கூட்டணிக்கு 108 வாக்குகள் கிடைத்தன.

மீண்டும் நாடாளுமன்றம் கூடும்போது அம்னோ தலைவர் அமாட் ஸாஹிட் ஹமிடியை ஆதரிக்கும் தரப்பினர் நடப்பு அரசாங்கத்திற்கு ஆதரவு தருவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது. பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் மஸ்லான். பெக்கான் நாடாளுமன்ற உறுப்பினர் நஜிப் துன் ரசாக், பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினர் அமாட் ஸாஹிட் ஹமிடி, பாடாங் ரெங்காஸ் நாடாளுமன்ற உறுப்பினர் நஸ்ரி அஸிஸ் உட்பட பலரின் நாடாளுமன்ற அலவன்ஸ் தொகையை அரசாங்கம் பிடித்தம் செய்துள்ளது. இந்நிலையில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கவரும் வகையில் நடப்பு அரசாங் கம் செயல்பட்டு வருவதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது. எம்ஏசிசி, உள்நாட்டு வருமான வரி வாரியம் ஆகியவற்றைப் பயன்படுத்தி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அணி தாவும்படி மிரட்டப்படுகின் றனர் என்று அன்வார் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 − eleven =