இப்போதைக்கு ஜிஎஸ்டி இல்லை

0

’ஜிஎஸ்டி எனப்படும் பொருள் சேவை வரியை இப்போதைக்கு மீண்டும் கொண்டுவரும் திட்டம் இல்லை. இதுபற்றி அரசாங்கம் விவாதிக்கவில்லை என்று பிரதமர் துன் மகாதீர் கூறினார்.
மக்களின் உணர்வுகளை நாங்கள் மதிக்கிறோம். இதைத்தான் மக்கள் விரும்புகிறார்கள் என்றால் இதைப்பற்றி பரிசீலிப்போம் என்று நேற்று நாடாளுமன்ற வளாகத்தில் அவர் கூறினார்.
இதுபற்றி ஏற்கெனவே கருத்துரைத்த நிதியமைச்சர் லிம் குவான் எங், ஜிஎஸ்டியை மக்கள் விரும்புகிறார்களா என்பதை நாம் முதலில் அறிய வேண்டும். அதன் பின்னரே பக்காத்தான் தலைவர்கள் மன்றம் முடிவு செய்யும் என்றார்.
இதுபற்றி தொடர்ந்து பேசிய மகாதீர், இப்போதைக்கு நாங்கள் இதுபற்றி எந்த ஆய்வும் செய்யவில்லை என்றார்.
இதனிடையே நாட்டின் உண்மையான வறுமை நிலையைக் கண்டுபிடிக்க தேசிய வறுமை வீதம் மீண்டும் மறு ஆய்வு செய்யப்படும். அதே நேரத்தில் வறுமை ஒழிப்பு முயற்சிகள் மீண்டும் ஆக்கப்பூர்வமாகச் செய்யப்படவேண்டும் என்றார் அவர்.
மக்களவையில் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வார் எழுப்பிய கேள்விக்கு அவர் பதிலளித்தார். மலேசியாவில் மிக மோசமான வறுமையும் அதிகமான மனித உரிமை அத்துமீறல்களும் நடப்பதாக ஐநாவின் மனித உரிமை செய்தியாளர் பிலிப் அல்ஸ்டன் கூறியிருப்பதை சுட்டிக்காட்டி அன்வார் இக்கேள்வியை முன்வைத்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + nine =