இன பதற்றங்களுக்கு அரசியல் தலைவர்களே காரணம்!

0

இந்நாட்டில் இன மற்றும் சமய பதற்றங்கள் அதிகரித்து வருவதற்கு அரசியல் வாதிகளே முக்கிய காரணம் என பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராஹிம் குற்றம் சாட்டினார். ஆகையால் இந்த விவகாரத்தை சமாளிக்க சில வகையான கலந்துரையாடலை அரசாங்கம் நடத்த வேண்டும் என போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான அவர் பரிந்துரைத்தார். அரசியல் தலைவரிடம் இருந்துதான் பதற்ற நிலை அதிகரிக்கிறது என்பதை நாம் ஒப்புக்கொள்ள வேண்டும். ஆகையால் இந்த பதற்ற நிலையை சமாளிக்க சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றார் அவர். அரசியல்வாதிகள் இன மற்றும் சமய பதற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான உரைகளை ஆற்றுகின்றனர். இறுதியில் மக்கள்தான் இதற்கு பலியாகுகின்றனர் என அவர் சொன்னார். ஆகையால் இது மக்களின் பிரச்சினைகள் அல்ல. சில அரசியல் தலைவர்களின் பிரச்சினையே என அவர் சுட்டிக் காட்டினார். நேற்று மக்களவையில் வேள்வி நேரத்தின் போது அன்வார் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இதனிடையே அன்வாரின் பரிந்துரை வரவேற்கத்தக்கது என பிரதமர் இலாகா துணை அமைச்சர் டத்தோ ஹனிபா மைடின் கூறினார். மலாய் உரிமைகள் மற்றும் தனிப்பட்ட சலுகைகள் போன்ற விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பும் போது இது போன்ற பதற்றநிலை உருவெடுப்பதாக அவர் சுட்டிக் காட்டினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × four =