இன்றைய நவீன யுகத்திற்கு ஏற்ற கருத்துகளை திருக்குறளாக வடித்தவர் திருவள்ளுவர்

இன்று திருக்குறளை உலகில் இருக்கின்ற அனைத்து மதத்தினரும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடுகிறார்கள். திருவள்ளுவர் எழுதிய 1,330 குறளையும் படித்துப் பார்த்தால் கூட அதில் எந்த ஒரு சமயத்தைப் பற்றியோ மதத்தைப் பற்றியோ குறிப்புகள் இல்லை.
திருக்குறள் எனும் பொதுமறை தமிழில் எழுதப்பட்டது என்ற ஒரேயொரு ஆதாரம்தான் திருவள்ளுவர் தமிழர் என்பதை நிரூபிக்கிறது என்று ஜொகூர் திராம் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.கோபாலகிருஷ்ணன் கூறினார்.
மலாயா பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற திருக்குறள் இசை நாட்டிய நாடகம் என்னும் நிகழ்ச்சியில் உரையாற்றியபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.


’எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்
அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு

எனும் திருக் குறைளை 2,000 ஆண்டுகளுக்கு முன்னதாகவே எழுதி வைத்து விட்டுச் சென்றிருக்கிறார் திருவள்ளுவர். இன்று நாம் வாழும் இந்தக் காலத்தில் இந்த திருக்குறள் எவ்வளவு அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. கடந்த காலத்தில் வாழ்ந்த திருவள்ளுவர் 2,000 ஆண்டுகளுக்குப் பிறகு இப்படி ஒரு சூழல் உருவாகும் என்பதை உணர்ந்து அதை எழுதியிருக்கிறார்.
இங்கு தொழில்நுட்பத்தின் உச்சத்தில் சமூகவலைத்தளங்களின் ஆக்கிரமிப்பின் நடுவில் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் அன்றே திருவள்ளுவர் எழுதிய திருக்குறளின் அர்த்தத்தை உணர்ந்து நடந்து கொள்வது அவசியம் என்றும் கோபாலகிருஷ்ணன் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

19 − 18 =