இன்றைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப பத்து கவான் தொகுதி மஇகா செயல்படும்

அன்று தொட்டு இன்று வரையில் பத்து கவான் தொகுதி மஇகா இந்தியர்களுக்காக பல சேவைகளை வழங்கி வந்துள்ளது.அதே போல் இன்று எனது தலைமையில் இன்னும் பல்வேறு உதவிகளை வழங்குவேன் என்று தொகுதித் தலைவர் சூ.இராமலிங்கம் கூறினார்.
எனக்கு முன்பிருந்த தலைவர்களும் சிறப்பான சேவையை வழங்கியுள்ளனர் என்பதை ஒருபோதும் மறுக்க முடியாது.இருப்பினும் நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, பல்வேறு சவால்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக சொன்னார்.
அதனை கருத்தில் கொண்டு பத்து கவான் தொகுதியில் வசிக்கும் இந்தியர்கள் மட்டுமின்றி பினாங்கு மாநிலத்தில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் கண்டறிந்து உதவிகளை வழங்குவோம் என்றார்.
பத்து கவான் தொகுதி மஇகாவின் 16ஆவது பேராளர் மாநாட்டில் சூ.இராமலிங்கம் இவ்வாறு உரையாற்றினார்.காலையில் தொகுதி இளைஞர் மற்றும் மகளிர் மாநாடும் நடைபெற்றது. இதில் தேசிய இளைஞர் பகுதித் தலைவர் புனிதன், பினாங்கு மாநில இளைஞர் பகுதி செயலாளர் இளங்கோ, மகளிர் பகுதித் தலைவி பிரேமா ஆகியோர் கலந்து கொண்டனர்.
பேராளர் மாநாட்டின் சிறப்பு பிரமுகர்களாக மஇகா மத்திய செயலவை உறுப்பினர் ஜெ.தினகரன், பினாங்கு மாநில மஇகா தலைவர் டத்தோ ஞானசேகரன் ஆகியோருடன் பத்து கவான் தொகுதி செயலவையினரும் கலந்து சிறப்பித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 × 2 =