இன்று மலாயாப் பல்கலைக்கழகத்தில் தங்கப் பதக்கம் விழா

0

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையில் முனைவர், முதுகலை மற்றும் இளங்கலைப் பட்டம் பெற்ற மாணவர்களுக்கான தங்கப் பதக்கம் வழங்கும் விழா ஓம்ஸ் அறவாரியம் மற்றும் மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை ஏற்பாட்டில் இன்று மலாயாப் பல்கலைக்கழக கலைப் புலத்தில் நடைபெறுகிறது.

11 ஆண்டுகள் வெற்றிப் பயணத்தை தொடர்ந்து இன்று 12ஆவது ஆண்டாக இந்த தங்கப் பதக்கம் விழா மலாயாப் பல்கலைக்கழக கலை மற்றும் சமூக அறிவியல் புலத்தில் அமைந்துள்ள விரிவுரை மண்டபம் ‘சி’யில் மாலை மணி 7.00க்கு இந்நிகழ்வு நடைப்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் முனைவர் பட்டம் பெற்ற மூவர், முதுகலைப் பட்டம் பெற்ற நால்வர், இளங்கலைப் பட்டம் பெற்ற அறுவர் மொத்தம் 13 மாணவர்கள் தங்கப் பதக்கம் பெறுகின்றனர்.

கலை, சமூக அறிவியல் புலம், மலாயாப் பலகலைக்கழகத்தின் முதல்வர் பேராசிரியர் டத்தோ முனைவர் டேனி வொங் சி கென் அவர்களின் தலைமையில் இந்நிகழ்ச்சி நடைப்பெறவுள்ளது. இந்நிகழ்ச்சிக்குச் சிறப்பு விருந்தினராக சுகாதாரத்துறை முன்னாள் துணையமைச்சர் மற்றும் மா.இ.கா வின் முன்னாள் உதவித்தலைவர் டான்ஸ்ரீ டத்தோ க. குமரன் அவர்கள் கலந்துக் கொள்வார். மேலும், இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்தின் தலைவரான இணைப்பேராசிரியர் முனைவர் கிருஷ்ணன் மணியம் மற்றும் இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரான மேனாள் இணைப்பேராசிரியர் முனைவர் சி. குமரன் அவர்கள் சிறப்பு உரையாற்றுவார்கள். ஆகவே, தமிழ் தூறையில் ஈடுபாடு கொண்டு அதில் மேற்கல்வியை தொடர விரும்பும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here