இன்று தேர்தல் நடந்தால் பக்காத்தான் தோற்கும்

பக்காத்தான் அரசாங்கம் மக்களின் குறைகளைக் கேட்பதை நிறுத்திவிட்டது. உடனடியாக தேர்தல் நடந்தால் இந்தக் கூட்டணி தோற்பது நிச்சயம் என்று பெர்சத்து கட்சி உறுப்பினரும் வியூகத் தலைவருமான டாக்டர் ராய்ஸ் ஹுசேன் முகமட் அரிப் கூறினார்.முன்பு தேசிய முன்னணி என்ன செய்ததோ இப்போது நாம், அதை செய்து கொண்டிருக்கிறோம்., மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும். இல்லையென்றால் தோல்வி நிச்சயம் என்று அவர் கூறினார். மக்களின் குறைகளை காதுகொடுத்து கேட்க வேண்டும். இல்லையென்றால் தோல்வி நிச்சயம் என்று அவர் கூறினார்.
’எமிர் ரிசேர்ச் என்ற அறிவு ஜீவிகள் ஆய்வு நிறுவனத்தின் நிறுவனரும் இயக்குனருமான அவர், இப்போது தேர்தல் நடந்தால் அம்னோ – பாஸ் கூட்டணி எளிதில் வெல்லும் என்று அவர் சொன்னார்.
கூட்டணியில் உள்ள தலைவர்கள் அனைவரும் தங்களுக்குள்ள அதிகாரம் மட்டும் போதும் என்று நினைக்கக்கூடாது. மக்களின் வாழக்கைச் செலவினங்கள், வாழ்க்கைத் தரம், வேலை வாய்ப்பு, வேலையில்லாத் திண்டாட்டம், வாங்கும் விலைகொண்ட வீடுகள், சுகாதார மையம் இப்படி பலவற்றைக் காதுகொடுத்துக் கேட்க வேண்டும்.
இதையெல்லாம் விட்டு விட்டு பறக்கும் கார், மூன்றாவது கார், கோஜெக் மோட்டார் சைக்கிள் பவனி என்றெல்லாம் பேசிக்கொண்டிருக்கிறோம் என்றார் அவர்.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 2 =