இன்புளூவன்சா நோயை குணப்படுத்துவதற்கு போதுமான மருந்து நாட்டில் இருக்கிறது

0

தற்போது நாட்டில் இன்புளூ வன்சா நோய் அதிகமாக பரவி வருகிறது. கடந்த மாதத்திலிருந்து அந் நோயினால் தாக்கப்பட் டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு ஏற்கெனவே அறிவித்திருந்தது.

இன்புளூவன்சா (புளூ) தொற்று நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு பயன்படுத்தப்படும் ஒசில் டாமிவீர் மருந்தை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்வதற்கு தனியார் துறையினர் அரசாங் கத்திடமிருந்து அனுமதி பெற வேண்டும்.

கடந்த மாதத்திலிருந்து அம்மருந்திற்கு அனுமதி கோரும் தனியார் துறை விண்ணப்பங்கள் அதிகரித்துள்ளன. எனவே அம்மனு விண்ணப் பங்களுக்கு விரைவில் ஒப்புதல் அளிப்பதற்கான நடவடிக்கைகளை சுகாதார அமைச்சு தற்போது மேற்கொண்டுள்ளது. இவ்விபரங்களை சுகாதார அமைச்சின் தலைமை இயக்குநர் டத்தோ நூர் ஹிஷாம் நேற்று தனது முகநூலில் குறிப்பிட்டார்.

தனியார் துறையினர் அம்மருந்தை வெளிநாட்டிலிருக்கும் ஒரு நிறுவனத்திடமிருந்து பெறுவதால் எந்த பிரச்சினையும் இல்லை. அரசாங்க சுகாதார நிலையங் களில் அந்நோய்க்கு மருத்துவம் செய்வதற்கு போதுமான மருந்துகள் கையிருப்பில் இருப்பதாக நூர் உறுதியளித்தார். தனியார் துறையினர் குறிப் பிட்ட மருந்தை இறக்குமதி செய்வதற்கான அனுமதி (பெர்மிட்) குறைந்தபட்சம் ஐந்து நாட்களில் அளிக்கப் படும்.

2019 இறுதியில் மனுச் செய்த தனியார் நிறுவனங்கள் ஏற்கெனவே அம்மருந்தை இறக்குமதி செய்து விட்டனர். தற்போது நாட்டில் இன்புளூவன்சா நோய் அதிகமாகப் பரவி வருவதால் அதற்கான தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று சுகாதாரத் துறை இயக்குநர் வலியுறுத்தினார்.

இந்த நோயானது விரைவாகப் பரவும் என்பதால் அதற்கான தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதன் மூலம் அதிலிருந்து தப்பிக்க முடியும். 2 வயதுக்கும் குறைந்த குழந்தைகளும் 65 வயதுக்கும் மேலான முதியவர்களும், கர்ப்பிணிகள், சர்க்கரை நோய், ஆஸ்துமா மற்றும் இருதய நோய் கண்டவர்களும் அந்த நோயினால் எளிதாகத் தாக்கப்படும் அபாயம் இருப்ப தால் தடுப்பூசி போட்டுக் கொள்வது அவசியமாகும்.

தனியார் துறையில் அம்மருந்திற்கு (ஒசில்டாமிவீர்) பற்றாக்குறை இருப்பது பற்றி இதுவரை சுகாதார அமைச்சு எந்த புகார் மற்றும் அறிவிப்புக் களை பெறவில்லை என்று நூர் ஹிஷாம் கூறினார்.
சுகாதாரத்தைக் கடைப் பிடித்தால் அந்நோய் மற்றவர் களுக்கு பரவாமல் தடுக்க லாம். அந்நோய்க்கு அறிகுறி களான இருமல், காய்ச்சல், மற்றும் தொண்டை அரிப்பு அதிகமாக இருந்தால் உடனடியாக விரைந்து சென்று மருத்துவரைப் பார்க்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × four =