இன்னும் சில அமைச்சர்கள் நீக்கப்படலாம்

0

கல்வியமைச்சர் பதவியை மஸ்லி மாலிக் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இன்னும் சில அமைச்சர்கள் அவ்வாறு செய்யக்கூடும் என ஆரூடங்கள் வலுத்துள்ளன.

பக்காத்தான் ஹராப்பான் அமைச்சரவையைச் சேர்ந்த சில அமைச்சர்கள் மற்றும் துணை அமைச்சர்கள் விலக்கப்படலாம் என வட்டாரங்கள் கூறின. மஸ்லியைப் போல் இன்னும் சில அமைச்சர்கள் பொதுமக்களின் குறை கூறல்களுக்கு ஆளாகியிருப்பதாக மலாயா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஸ்மான் பாவி தெரிவித்தார்.

பக்காத்தான் ஹராப்பான் பங்காளிக் கட்சிகளைச் சேர்ந்த இன்னும் சில அமைச்சர்கள் பிரதமர் மகாதீரின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப தங்கள் பணிகளைச் சிறப்பாகச் செய்யவில்லை என அவர் சொன்னார். சிறப்பாகச் செயல்படாத அமைச்சர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் அல்லது வேறு அமைச்சுக்கு மாற்றப்பட வேண்டும் என அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 3 =