இன்ஃபுளூவென்ஸா நோய் அதிகரிப்பு; சுகாதார அதிகாரிகளின் மெத்தனமே காரணம்

0

சபாவில் முதன்முதலில் இன்ஃபுளூவென்ஸா நோய் பரவியதற்கு சுகாதார அதிகாரிகளின் மெத்தனப் போக்கே காரணம் என டாக்டர் மணிமலர் செல்வி நாயக்கர் தெரிவித்தார்.
நோய் கண்டறியும் துறை நிபுணரும் விரிவுரையாளருமான அவர், அங்கு அந்த நோய் கண்டபோதே, தடுப்பூசி நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால், அது அதிகமாகப் பரவி இருக்காது என அவர் குறிப்பிட்டார்.
தடுப்பூசி போடுவதற்குப் போதுமான மானியத்தை ஒதுக்காத அரசியல்வாதிகளின் மீது குற்றம் சாட்டுவது ஒருபுறம் இருந்தாலும், அதன் காரணம் வேறு மாதிரியானது என அவர் குறிப்பிட்டார். சபா மருத்துவர்கள் அந்த நோயின் கடமையை உணர்ந்து, அதற்கேற்ற வகையில் தடுப்பூசி நடவடிக்கையை மேற்கொண்டிருக்க வேண்டும்.
அவர்கள் அதனை உணர்ந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அரசியல்வாதிகளின் மீது குற்றம் சொல்வதில் பயனேதும் இல்லை.
சபாவில் இருவருக்கு அந்நோய் கண்டிருப்பதன் மூலம் அது மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பிருப்பதாகவும் அவை வெவ்வேறு இடங்களில் கண்டு பிடிக்கப்பட்டிருந்தாலும், மருத்துவர்கள் தடுப்பூசி போடப்பட வேண்டிய முக்கியத்துவத்தை முழுமையாக உணரவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார். தடுப்பூசி போட்டுக் கொள்ளும் முக்கியத்துவத்தை மருத்துவர்கள்தான் பெற்றோர்களுக்கு உணர்த்த வேண்டுமென மணிமலர் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 8 =