இனிமேல் 1எம்டிபி வழக்குகள் இணக்கமான சூடிநநிலையில் நடைபெறும் -நஜிப் நம்பிக்கை

பக்காத்தான் ஹராப்பான் ஆட்சி கவிடிநக்கப்பட்டு பெரிக்காத்தான் நேஷனல் ஆட்சி முஹிடின் யாசின் தலைமையில் அமைக்கப்பட்ட பின்னர், 1எம்டிபி வழக்குகள் என்னவாகும் என்ற கேள்வி நாட்டு மக்களின் மனதில் உருவாகி இருக்கிறது. அந்த வழக்குகள் கிடப்பில் போடப்படும் என்ற வதந்தி உலா வரும் வேளையில், அவ்வழக்குகளை எதிர்கொள்ள ஏதுவான, இணக்கமான சூடிநநிலை வரும் என முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் சூசகமாகக் குறிப்பிட்டுள்ளார்.
2018ஆம் ஆண்டு பக்காத்தான் ஹராப்பான் ஆட்சிக்குத் தலைமை ஏற்ற துன் மகாதீர், 1எம்டிபி மற்றும் நஜிப் சம்பந்தப்பட்ட எஸ்ஆர்சி வழக்குகளின் விசாரணையை துரிதபடுத்தி நஜிப்பை நீதிமன்றக் கூண்டில் ஏற்றினார்.
அந்த வழக்குகள் தற்போது உயர்நீதிமன்றங்களில் விசாரிக் கப்பட்டு வருகின்றன. எஸ்ஆர்சி வழக்கு முடியும் தறுவாயில் இருப்பதாகவும் இன்னும் சில மாதங்களில் அதன் தீர்ப்பு வெளி யிடப்படும் என்றும் நம்பப்படுகிறது.
நஜிப்பின் கூற்றுக்குப் பிரதமர் முஹிடின் எந்தவித மறுப் பறிக்கையையும் வெளியிடவில்லை. எனினும், முஹிடினுக்கும் நஜிப்பிற்கும் இடையே நல்ல உறவு இல்லை என்பது தெரிந்த ஒன்றே. 1எம்டிபி பிரச்சினையைப் பொதுவில் அறிவித்த முஹிடினை, துணைப் பிரதமர் பதவியிலிருந்து நஜிப் அகற்றியது குறிப்பிடத்தக்கது.
தாம் குற்றம் செடீநுயவில்லை, 1எம்டிபியின் பணத்தைக் கொள்ளையடிக்கவில்லை என்றும் தம்மை ஜோ லோ தவறாக வழி நடத்தியதாகவும் நஜிப் கூறி வருகிறார்.
2009 லிருந்து 2014 ஆம் ஆண்டு வரை 1எம்டிபியின் பணம் 450 கோடி ரிங்கிட் திருடப்பட்டதாகவும் அதில் 100 கோடி ரிங்கிட் நஜிப்பின் வங்கிக் கணக்கில் சேர்க்கப்பட்டதாகவும் அமெரிக்க நீதித் துறை குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

seventeen + 17 =