இனப்பிரச்சினை ஒரு புற்றுநோயாக உருவெடுக்க அனுமதிக்ககூடாது

0
PUTRAJAYA, 2 Julai — Timbalan Perdana Menteri Datuk Seri Dr Wan Azizah Wan Ismail yang juga Menteri Pembangunan Wanita, Keluarga dan Masyarakat (KPWKM) pada sidang media mengenai isu pernikahan kanak-kanak 11 tahun pada Majlis Ramah Mesra Timbalan Perdana Menteri Bersama Kumpulan Sasar KPWKM hari ini. –fotoBERNAMA (2018) HAK CIPTA TERPELIHARA

நாட்டில் இனப் பிரச்சிiனைகள் ஒரு புற்றுநோயாக உருவெடுக்க நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என துணை பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில் கூறினார். நாட்டின் தொடர் வளர்ச்சிக்கு இனப் பிரச்சினைகள் ஒரு தடையாக அமைந்துவிடும் என அவர் நினைவுறுத்தினார்.
நேற்று முன்தினம் தமது பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் நடந்த தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பு நிகழ்ச்சியில் அவர் பேசினார்.இந்நாட்டின் வளங்களை அனைத்து இனங்களும் ஒன்றிணைந்து அனுபவிக்க வேண்டும். இந்நாடு அனைத்து இனத்தவருக்கும் சொந்தமானது என்றார் அவர்.
மலாய்க்காரர், சீனர் அல்லது இந்தியர் என்ற பாகுபாடின்றி நாம் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையாக இருக்க வேண்டும் என அவர் நினைவுபடுத்தினார். நமக்கிடையே கருத்து வேறுபாடுகள் நிலவினால் அதனை உடனே களைய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் சொன்னார். சகிப்புத்தன்மை புரிந்துணர்வு மற்றும் நல்லிணக்கம் தொடர்ந்து நிலைக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen − seventeen =