இந்த கடவுளுக்கு விரதம் இருந்தால் கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் நீங்கும்

ஏற்கனவே பிரிந்த தம்பதியர்கள் விரதம் இருந்து கோவில்களில் ஸ்தல மரங்களுக்கு கீழே வீற்றிருக்கும் நாகர் சிலைக்கு வெள்ளிக்கிழமை தோறும் ராகு கால நேரத்தில் அபிஷேகம் செய்து, செவ்வரளி மலர்கள் சாற்றி, மஞ்சள் குங்குமம் வைத்து, இரண்டு அகல் விளக்குகளில் நெய் தீபம் ஏற்றி வைத்து விட்டு கணவன் மனைவி பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும். இப்படி வழிபடுவதால் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வார்கள். மீண்டும் வாழ்வில் இணைந்து கடைசி வரை ஒன்றாக அன்னோன்யமாக பயணம் செய்வார்கள்.

அது போல் வெள்ளிக்கிழமை அன்று விரதம் இருந்து நவகிரக சன்னிதிக்கு சென்று அதில் இருக்கும் சுக்கிர பகவானுக்கு ஒரு அகல் விளக்கில் சிறிது கற்கண்டு போட்டு அதில் நெய் ஊற்றி தீபமேற்றி வழிபட வேண்டும். சுக்கிர பகவானுக்கு அகல் விளக்கில் கல்கண்டு தீபம் ஏற்றுவது கணவன் மனைவி பிரச்சனையை தீர்க்கும். வீட்டிலேயே சாதாரணமாக அடிக்கடி சண்டை சச்சரவுகள் இருப்பவர்கள் கூட இது போல் செய்து வந்தால் ஒற்றுமையாக மாறி விடுவார்கள்.


கணவன் மனைவி மட்டுமல்லாமல் குடும்பத்தில் இருக்கும் மற்ற நபர்களிடமும் அடிக்கடி பிரச்சினைகள் ஏற்பட்டு வந்தால் சிவாலயங்களில் இருக்கும் நந்தி பகவானுக்கு திங்கள் கிழமை அன்று காலை வேளையில் 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இரண்டு ஜோடியான அகல் விளக்கில் நெய் தீபம் ஏற்றி வர குடும்பத்தில் இருக்கும் சண்டை சச்சரவுகள் நீங்கும். அமைதி பிறக்கும் என்பது ஐதீகம். இது கணவன் மனைவிக்கும் பொருந்தும் மற்ற உறவுகளுக்கும் பொருந்தும்.

அது போல் கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் ஏற்பட்டு கோர்ட்டு கேஸ் வரை சென்று இருந்தால் மீண்டும் ஒன்று சேர்வதற்கு சக்கரத்தாழ்வார் சன்னதியில் 12 முறை வலம் வந்து 48 நாட்கள் விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி வர தம்பதியர்கள் ஒன்று சேர்வார்கள். ஒவ்வொரு கடவுளருக்கும் நெய் தீபம் ஏற்றுவதால் நிறைய நன்மைகள் உண்டாகின்றன. மற்ற எண்ணெய்களை காட்டிலும் நெய் தீபம் ஏற்றுவது 100 பரிகாரம் செய்வதற்கு சமமாகும். சுத்தமான நெய்யாக பார்த்து வாங்கி வைத்துக் கொண்டால் இது போன்ற பரிகாரங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + one =