இந்தோனேசியாவிற்கு போதைப் பொருள் கடத்தல்: கையாளாக இருந்த காவல் துறை அதிகாரிகள் கைது

0

கடல் வழியாக இந்தோ னேசியாவிற்கு போதைப் பொருள்களை கடத்திச் செல்லும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக நம்பப்படும் மூவார் மாவட்ட காவல் துறை தலைமையகத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரி உட்பட மூவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்று ஜொகூர் காவல்துறை தலைவர் டத்தோ அயூப் கான் மைடின் பிச்சை கூறினார்.
லான்ஸ் கார்ப்பரல் அந்தஸ்தி லுள்ள அந்த காவல் துறை அதிகாரி கடந்த 25 ஜூன் அன்று கைது செய்யப்பட்டதாக கூறிய அயூப் கான், மற்ற நடவடிக்கைகளில் மேலும் மூவர் கடந்த 6 ஜூன் அன்று கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.
விசாரணையில் கைதான காவல் துறை அதிகாரி போதைப் பொருள் கடத்தல் கும்பலுக்கு கையாளாக இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த சோதனையில் 84,000 வெள்ளி மதிப்புடைய 21 கிலோ கிராம் எடையிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப் பட்ட வேளையில், 10,000 வெள்ளி மதிப்பிலான ஒரு வாகனம் மீது சீல் வைக்கப் பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட மற்றும் சீல் வைக்கப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பீடு 94,000 வெள்ளியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × two =