இந்து ஆலயங்கள் தொடர்பில் தப்பான செய்திகள் வேண்டாம்
கெடா மந்திரி பெசாரின் அதிகாரி வேண்டுகோள்

கெடா மாநிலத்தில் இந்து ஆலயங்கள் தொடர்பில் எந்தவொரு தப்பான செய்தியும் வெளியிட வேண்டாம் என கெடா மந்திரி பெசாரின் இந்தியர் பிரிவு அதிகாரி குமரேசன் கேட்டுக் கொண்டார்.
கோயில் தொடர்பில் பிரச்சினை கள் இருந்தால் எங்களை நேரில் வந்து சந்தியுங்கள். எதையும் எங்கள் பார்வைக்குக் கொண்டு வராமல் அறிக்கை விடுவதை நிறுத்திக் கொள்ளும்படி அவர் நினைவுறுத்தினார்.
தனியார் நிலத்திலும் வீட்டின் முன்புறத்திலும் கோயில்கள் மற்றும் சாமிமேடைகளை அமைப்பது தொடர்பில் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண எங்கள் உதவியை நாடுங்கள்.
அனுமதியின்றி அமைக்கப் படும் வழிபாட்டுத் தலங்களை அகற்றும் நகராண்மைக் கழகத்தின் நடவடிக்கையானது நடைமுறையில் இருந்து வருகிறது.
எந்த அரசாங்கமாக இருந்தா லும் நகராண்மைக் கழகத்தின் வழி நடவடிக்கையை மேற்கொள்வது வழக்கமான ஒன்று. இருப்பினும் ஏதாவது பிரச்சினைகள் இருந்தால் எங்களை நேரடியாகச் சந்திக்கலாம் என்றார் அவர்.
கெடா மாநில பாஸ் அரசாங்கம் இந்தியர்களின் நலனுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது என்றார். இதனிடையே தாமான் ஸ்ரீ வாங் என்ற இடத்தில் செல்லையாவின் வீட்டின் முன் அமைக்கப்பட்டிருக்கும் சாமிமேடையை அகற்றும்படி சுங்கைபட்டாணி நகராண்மைக் கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இந்த விவகாரம் என் கவனத் திற்குக் கொண்டு வரப்படவில்லை. நகராண்மைக் கழகத்திடமும் விளக்கம் கேட்டிருக்கிறேன்.
கெடா மாநிலத்தில் இந்தியர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஆட்சிக்குழு உறுப்பினர் அஸ்மான் கவனிக்கிறார்.
அவரின் பார்வைக்கு இந்தப் பிரச்சினையைக் கொண்டு செல்வோம் என குமரேசன் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 − 12 =