இந்திய தொடரின்போது கை குலுக்க மாட்டோம்: தென்ஆப்பிரிக்கா அணி பயிற்சியாளர் தகவல்

தென்ஆப்பிரிக்கா அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தபோட்டிகள் வருகிற 12-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை நடக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றாத வண்ணம் இருக்க எங்கள் வீரர்கள் போட்டியின்போது கை குலுக்க மாட்டார்கள் என்று தென்ஆப்பிரிக்கா அணியின் தலைமை பயிற்சியாளர் மார்க் பவுச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள இங்கிலாந்து அணி ஏற்கனவே கை குலுக்க மாட்டோம் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மார்க் பவுச்சர் கூறுகையில் ‘‘வைரஸ் போன்ற தொற்று கிரிமிகள் கை குலுக்குவதனால் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகவே, கை குலுக்காமல் இருப்பது சிறந்தது என்றால், அதை நாங்கள் செய்வோம். இந்த தொடரில் எங்கள் வீரர்கள் அதை கடைபிடிப்பார்கள். முன்னெச்சரிக்கை காரணமாக எங்களது கிட் பேக்கில் அதிக அளவில் ஹேண்ட்வாஷ் பாதுகாப்பான்கள் உள்ளன’’ என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen + twelve =