இந்திய தூதரகத்தின் அரசியலமைப்பு தின கொண்டாட்டம்

இந்தியாவின் 75வது சுதந்திர தினத்தையொட்டி தலைநகரில் இந்திய அரசியலமைப்பு தின கொண்டாட்டம் சிறப்பாக நடைபெற்றது. பிரிக்பீல்ட்ஸில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் இந்திய கலாசார மையத்தில் மலேசியாவிற்கான இந்திய தூதர் பி.என் ரெட்டி தலைமையில் இந்த கொண்டாட்டம் நடைபெற்றது. இந்த கொண்டாட்டத்தில் சிறப்பு பிரமுகராக கலந்துகொண்ட மலேசியாவின் முன்னாள் சட்டத் துறை தலைவர் டான்ஸ்ரீ டோமி தோமஸ் சிறப்புரை ஆற்றினார். கடந்த 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி இந்திய பாராளுமன்றம் இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொண்டதாக பி.என் ரெட்டி தமது உரையில் கூறினார். இதனைத் தொடர்ந்து கடந்த 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி இந்தியாவின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததாக அவர் சுட்டிக்காட்டினார். இந்திய அரசியலமைப்பை அதன் வடிவமைப்புக் குழு தலைவர் டாக்டர் பீம் ராவ் அம்பேத்கரின் 125 ஆவது பிறந்தநாளை இந்தியா கொண்டாடியதாக அவர் குறிப்பிட்டார். இந்திய அரசியலமைப்புத் தந்தையான அம்பேத்கரை நினைவு கூரும் வகையில் நவ.26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினமாக இந்திய அரசாங்கம் அறிவித்ததாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 + 5 =