இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும்

அரசாங்கத் துறையில் இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் அதிகரிக் கப்பட வேண்டும் என ஜொகூர் மஇகா இளைஞர் பிரிவு தலைவர் ஆர். சத்தியசீலன் வலியுறுத்தி னார்.
மாவட்ட மன்ற அலுவலக, சமூக நல இலாகா அலுவகம் போன்றவற்றில் இந்திய இளை ஞர்களுக்கு கூடுதல் வேலை வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென நேற்று ஜொகூர் மஇகா இளைஞர் பிரிவு மாநாட்டில் அவர் முன்மொழிந் தார்.
அதே வேளையில், இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அலுவலகத்தில் ஓர் இந்திய பிரதிநிதியை ஜொகூர் மாநில அரசாங்கம் நியமனம் செய்ய வேண்டும் என அவர் சொன் னார். ஜொகூர் மஇகா தலைமைத் துவம் இந்த விவகாரத்தில் ஜொகூர் மந்திரி பெசாரிடம் கொண்டுச் செல்ல வேண்டும் என்றார் அவர்.
கோவிட் – 19 வைரஸ் தாக் கத்தினால் சிங்கப்பூரில் வேலை செய்து வந்த அதிகமான இந்தியர்கள் வேலை வாய்ப்பு களை இழந்துள்ளதால், இப் பிரச்சினைக்குத் தீர்வு காண ஜொகூர் மாநில அரசாங்கம் ஒரு வழிமுறையை காண வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
வேலை வாய்ப்புகளை இழந் துள்ள இந்தியர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்கி வருவதாக அவர் சொன்னார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen + 10 =