இந்தியாவுக்கான செம்பனை எண்ணெய் ஏற்றுமதி வெகுவாகக் குறையலாம்

0

இந்தியா மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்யும் செம்பனை எண்ணெயின் கொள்ளளவு ஜனவரி மாதத்தில் வெகுவாகக் குறையும் அபாயம் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்திய அரசின் அதிகாரப்பூர்வமற்ற உத்தரவின் பேரில், அந்நாட்டின் செம்பனை எண்ணெய் இறக்குமதியாளர்கள் பிப்ரவரி மாதத்துக்கு எந்தவொரு இறக்குமதிக்கான அழைப்பாணையையும் வெளியிடவில்லை எனத் தெரிகிறது.
காஷ்மீர் பிரச்சினையிலும் புதிய குடிநுழைவு சட்டத்தையும் கடுமையாக விமர்சித்து, இந்தியாவை துன் மகாதீர் குற்றம் சாட்டிப் பேசியதால், மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் செம்பனை எண்ணெய்க்கு அந்நாடு தடை விதித்துள்ளது.
ஜனவரி மாதத்தின் செம்பனை எண்ணெயின் இறக்குமதி 70,000 டன்னாக இருக்கும் என்றும் அது 2011லிருந்து 2019ஆம் ஆண்டு வரை வாங்கப்பட்ட ஒவ்வொரு மாதத்தின் சராசரியான 253,889 டன்னோடு ஒப்பிடுகையில், அது ஆகக் குறைந்த அளவு எனச் சொல்லப்படுகிறது.
2019இல் இந்தியா 4.4 மில்லியன் டன் செம்பனை எண்ணெயை மலேசியாவிடமிருந்து இறக்குமதி செய்ததாக மலேசிய செம்பனை எண்ணெய் வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × five =