இந்தியாவில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்ளுங்கள்

  • கே.பி. சாமி வேண்டுகோள்


இந்தியாவில் கோவிட் -19 புதியத் தொற்று காரணமாக இப்போது இந்திய விமானங்கள் மலேசியா வருவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து நோய்த்தொற்று பரவாமல் இருக்க மலேசிய அரசாங்கம் இந்த தடையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியாவுடனான இருவழி விமானப் பயணங்களுக்கு மலேசிய அரசாங்கம் தற்காலிகமாக தடை விதித்துள்ளதால் தற்போது சென்னை, திருச்சி, டில்லி உட்பட பல இடங்களில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் உடனடியாக மலேசிய தூதரகத்துடன் தொடர்பு கொள்ளும்படி பயண முகவர் கே.பி. சாமி கேட்டுக் கொண்டார்.
பத்திரமாக நாடு திரும்ப விரும்பும் மலேசியர்கள் தூதரகத்தை தொடர்பு கொள்வது நல்லது. இதற்கு முன்னர் கோவிட் -19 தாக்கத்தின் போது வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட மலேசியர்களை அரசாங்கம் பத்திர மாக அழைத்து வந்தது. அந்த வகையில் இந்தியாவில் பல இடங்களில் சிக்கிக் கொண்ட மலேசியர்கள் பத்திரமாக நாடு திரும்புவதற்கு சிறப்பு விமானம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று உள்துறை அமைச்சை கேட்டுக் கொண்டிருப்ப தாக கே.பி. சாமி தெரிவித்தார்.
தனிப்பட்ட முறையில் முக்கிய அலுவல் பயணம் மற்றும் மருத்துவ சிகிச்சைகளுக்காக இந்தியாவிற்கு சென்ற பலர் நாடு திரும்புவதற்கு விமான சேவை இல்லாமல் இப்போது சென்னை, திருச்சி, டில்லி போன்ற இடங்களில் சிக்கிக்கொண்டுள்ளனர்.
இவர்களை பத்திரமாக நாட்டிற்கு அழைத்து வர சிறப்பு விமானங்கள் ஏற்பாடு செய்யும்படி அரசாங்கத்தை கே.பி. சாமி கேட்டுக் கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − 2 =