இந்தியாவில் ‘உலக’ ஹாக்கி திருவிழா;

இந்தியாவில் ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. முதல் போட்டியில் இந்திய அணி, பிரான்சை சந்திக்கிறது. இந்தியாவின் புவனேஸ்வரில் உள்ள கலிங்கா மைதானத்தில் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில், ‘ஜூனியர்’ உலக கோப்பை ஹாக்கி தொடர் நேற்று துவங்கியது. டிச. 5 வரை நடக்கும் இத்தொடரில் இந்தியா, பாகிஸ்தான் உட்பட 16 அணிகள் பங்கேற்கின்றன. இவைகள் தலா 4 அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, போட்டிகள் முதலில் லீக் முறையில் நடக்கும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் சாதிக்கும் அணி டிச. 3ல் நடக்கும் அரையிறுதியில் மோதும். டிச. 4ல் பைனல் நடக்கவுள்ளது. மீண்டும் சாதிக்குமா ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, பிரான்ஸ், கனடா, போலந்துடன் ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்திய அணி இன்று தனது முதல் போட்டியில் பிரான்சை சந்திக்கிறது. அடுத்து நாளை கனடா, பின் போலந்து (நவ. 26) அணிகளை சந்திக்கவுள்ளது. கடந்த 2016ல் லக்னோவில் நடந்த தொடரில் சாதித்த இந்திய இளம் படை, உலக கோப்பை வென்று அசத்தியது. இம்முறை முன்கள வீரர்கள் உத்தம் சிங், மன்ஜீத், சிர்மாகோவுடன் திவாரி, சஞ்சய் உள்ளிட்ட வீரர்கள் கைகொடுக்கும் பட்சத்தில் இரண்டாவது முறையாக கோப்பை வெல்ல முயற்சிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =