இந்தியர்கள் நலனில் கவனம்

நேற்று முன்தினம் காலை இங்கு தாமான் டாமாய் இண்டாவில் நடைபெற்ற மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மோரிப் சட்டமன்ற உறுப்பினர் துவான் ஹாஜி ஹஸ்னுல் பகாருடின் ‘கடந்த தேர்தல் காலங்களில் இவ்வட்டார இந்தியர்கள் எனது வெற்றிக்காக பாடுபட்டுள்ளனர். அவர்களின் நலனில் அதிகம் கவனம் செலுத்தி அதற்காக உழைப்பேன்.’ என உறுதி மொழி வழங்கினார்.
இங்கே, வறுமைக் கோட்டில் உள்ளவர்களின் வாழ்வாதாரம் உயரவும், வேலை வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர்கள் தொழில் துறைகளில் ஈடுபடவும் தனது தொகுதி அதற்கான பணிகளை செயல்படுத்துமென அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் அவரது பிரதிநிதி பெரோஸ்கான், மக்கள் தொடர்பு தலைவர் துவான் முகமட் ஷாபியி ஹருண் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =