இந்தியர்கள் சிறுதொழில்களில் ஈடுபடவேண்டும்

தற்போதைய பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் சிறு தொழில் செய்வதில் நமது இந்திய சமூகத்தினர் கவனம் செலுத்த வேண்டும் என மலேசிய இந்திய வர்த்தகர் சங்கம் (மைக்கி) ஜொகூர் கிளையின் தலைவர் டத்தோ கிருஷ்ணன் வலியுறுத்தினார்.
வேலைகளுக்கு சிங்கப்பூரை நம்பி இருந்த காரணத்தினால் கோவிட்-19 வைரஸ் தாக்கத்தால் தற்போது ஆயிரக்காணக்கானோர் வேலை இழந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
நம் கை வசம் சிறு தொழில் இருந்தால் தற்போதையே நெருக்கடி யான கால கட்டத்தில் நம்மால் சமாளிக்க இயலும் என்றார் அவர்.
கோவிட்-19 வைரஸ் தாக்கத் தால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் குறிப் பாக இந்தியர்கள் சிறு தொழில் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றார் அவர்.
நேற்று முன்தினம் இங்கு மித்ரா ஆதரவுடன் ஜொகூர் மைக்கி கிளை ஏற்பாடு செய்த சிறு தொழில் கருத்தரங்கை தொடக்கி வைத்து அவர் பேசினார்.
மைக்கி தலைமையகம் நாடு முழுவதும் இது போன்ற கருத்தரங்குகளை நடத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்த கருத்தரங்கில் 250 பேர் கலந்துக் கொண்டு தங்களுடைய ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளது மிகவும் வரவேற்க தக்கது என்றார் அவர்.
நிர்னையிக்கப்பட்ட பணி நெறிமுறையுடன் இந்த கருத்தரங்கு வெற்றிகரமாக நடைபெற்றது மகிழ்ச்சியை தருவதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here